உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையத்திடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு உள்ளிட்ட, அக்கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக்கூடாது; உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழ், உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகார வரம்பு உள்ளதா' என, கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தும்படி, ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்து, ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகார வரம்பு குறித்து, இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க, பழனிசாமி தரப்பில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தில் கேட்டு பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை, ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KR india
ஜூன் 28, 2025 15:41

சற்று, காலச்சக்கரத்தின், பின்னோக்கி பயணித்து பாருங்கள். முன்பு, பி.ஜெ.பி யுடன், அ.தி.மு.க கூட்டணி வைத்த போது, அன்றைய சில அ.தி.மு.க அமைச்சர்கள் என்ன கூறினார்கள் என்று யோசியுங்கள். நாங்கள், பி.ஜெ.பி யுடன் கூட்டணி வைத்ததே, அ.தி.மு.க வையும், சின்னத்தையும் மீட்க தான் மக்களே என்று கூறினார்கள். தற்போது, மீண்டும், அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சியுடன், கூட்டு சேர்ந்துள்ள காரணமே, இரட்டை இலை சின்ன விவகாரம் தான் என்று கருத முடியும் பி.ஜெ.பி, இந்த இரட்டை இலை சின்ன விவகார "பிடியை" விட்டால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடும். அதாவது, இரட்டை இலை சின்னம் எடப்பாடி கைக்கு, போன அடுத்த கணமே, அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியை விட்டு விலகுவதற்கு, அதிகமான வாய்ப்புக்கள் உண்டு. எனவே, 2026ஆம் வருடம் ஏப்ரல் மாதம் வரை இந்த விஷயத்தை இழுக்க வேண்டும். அப்பத்தான், அ.தி.மு.க, பா.ஜ.க வின் கைக்குள் நிற்கும். அதே, சமயத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க வெற்றி பெற்ற பின், பேசப்பட வேண்டிய விஷயத்தை தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஆட்சி, இப்போதே பேச வேண்டிய தேவை இல்லை. அமித்ஷா அவர்கள் இது போன்று பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இது மகாராஷ்டிரா அல்ல, தமிழகம் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த, அனைவரின் சிந்தனையும், செயல்பாடும், கூட்டணியின் வெற்றி என்ற ஒற்றை புள்ளியை நோக்கி, மட்டுமே பயணிக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


Thravisham
ஜூன் 28, 2025 14:41

ரெட்ட எல இனி இல்ல


Sudha
ஜூன் 28, 2025 14:39

தேர்தல் ஆணையம் அவங்க கையிலே உயர் மன்றம் இவங்க கையிலே உச்ச மன்றம் 4 பேர் கையிலே அரசு ஒருத்தன் கையிலே இந்திய மக்கள் அழுகையிலே


GMM
ஜூன் 28, 2025 11:01

உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகார வரம்பு உள்ளதா? அது போல் அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தை விசாரிக்க நீதி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? வழக்கறிஞர் எவரும் தெளிவான விதி முறை கூறி வாதிடுவது இல்லை. வெட்டி வழக்குகள் குறைய நீதி விசாரணை கட்டண அடிப்படையில் இருக்க வேண்டும்.


Yes your honor
ஜூன் 28, 2025 10:39

இபிஎஸ் ஐடியாமணி என்பதை மீண்டும் நிறுபிக்கிறார். திரு. அமித் ஷா ஜி கூட்டாட்சி என்றவுடன் முன்னயும் போகமுடியவில்லை, பின்னையும் போகமுடியவில்லை. முறைத்துக் கொண்டால் இரட்டை இல்லை சின்னத்தில் கைவைத்து விடுவார்களோ என்று பயம். அதனால் தான், கோர்ட் மூலம் எலக்ஷன் கமிஷனுக்கு பிரஷர் வைக்கப் பார்க்கிறார். இரட்டை இல்லை என்பது 10,000 பிரச்சனைகளில் ஒன்று, அவ்வளவு தான். அதிமுகவும் திராவிட கட்சிதான், சகுனித்தனம் சாணக்கியனிடம் எடுபடாது. கூடி வாழ்ந்தால் மட்டுமே கோடி நன்மை.


Pandianpillai Pandi
ஜூன் 28, 2025 09:20

பாஜக கிட்ட கேட்க வேண்டியதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டா அவங்க என்ன செய்வாங்க ? உங்கள நேர்ல வாங்க பதில் சொல்றோம்ன்னு சொல்லுவாங்க . மக்களுக்கான தேர்தல் ஆணையம் என்ற அந்த கெத்த விட்டுட்டு கொத்தடிமையா இருக்கு. இந்திய மக்கள் தான் பாவம். நடப்பவைகள் எல்லாம் தங்களுக்கு விரோதமாக உள்ளது என்பதை உணர்ந்தும் ஊமையாகி கிடக்கிறார்கள்.


Yes your honor
ஜூன் 28, 2025 10:28

எப்படி தேசிய கட்சி என்னும் கெத்த விட்டுட்டு காங்கிரஸ் திமுக கிட்ட கொத்தடிமையா இருக்கே அப்படியா?


திகழ்ஓவியன்
ஜூன் 28, 2025 09:04

மோடி அண்ட் அமித்ஷா உத்தரவு கொடுத்தால் தான் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை