உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி

அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்க தடை கோரிய வழக்கில், 'கடவுள் மறுப்பாளரான அவரது பெயரில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது.அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். தான் ஹிந்து அல்ல என்பதை அடையாளப்படுத்திக் கொண்டவர். கோயில்கள், சிலை வழிபாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.அவர் எழுதிய 'ஆரியமாயை' புத்தகத்தில்,' நாலு தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, காளை ஏறும் கடவுள், காக்காய் மீது பறக்கும் கடவுள் என புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் ஹிந்து என கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இச்செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என கேலி செய்வார்களே! இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் துாக்கிப் போட்டுக் கொள்ள நமக்கு மனம் எப்படித் துணியும்.. ஆகவே நாம் ஹிந்து அல்லவென்று கூறுகிறோம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.'தீ பரவட்டும்' புத்தகத்தில்,'கம்பராமாயணம், பெரியபுராணம் ஒழிக்கப்பட வேண்டும். இவை கற்பனைக் கதைகள். ஆரிய மார்க்கத்தைப் புகுத்தும் கருவிகள். ஆரியர்களை மேன்மைப்படுத்த, தமிழரை இழிவுபடுத்த, அடிமைப்படுத்த அவை பயன்படுகின்றன. தமிழரின் வாழ்வு, நெறி, அரசு, மானமும் கெடுவதால், அவைகளை ஒழிப்போம். தீயிலிடுவோம்,' என அண்ணாதுரை எழுதியுள்ளார்.அண்ணாதுரை நினைவுநாளில் ஹிந்து கோயில்களில், கோயில் நிதியிலிருந்து சிறப்பு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி , சேலை வழங்குவதை நிறுத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார்.

நீதிபதிகள்:

கடவுள் மறுப்பாளர் அண்ணாதுரை பெயரில் எப்படி கோயில்களில் அன்னதானம் வழங்கலாம் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. அடுத்ததாக ஈ.வெ.ரா.,நினைவு நாளில் கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுமா, அல்லது யாரோ ஒரு தலைவர் அல்லது வெளிநாட்டு தலைவர் பெயரில் அன்னதானம் வழங்குவீர்களா, இதற்கு கோயில் நிதியை பயன்படுத்துவீர்களா, இதற்குரிய விதிமுறைகள் என்ன.

அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் சுப்புராஜ்:

கோயில்களின் உபரி நிதியிலிருந்து சுதந்திரதினம், அண்ணாதுரை நினைவு தினத்தில் ஏழைகளுக்கு 1989 லிருந்து கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம்,' என அண்ணாதுரை கூறியுள்ளார்.

நீதிபதிகள்:

ஒருவரது பெயரில் கோயில்களில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை கமிஷனரிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Boothalingam Pillai
ஜூலை 11, 2025 06:40

ஆட்சியில் இருந்த காலத்தில் சொற்ப காலமே ஒரு குற்றச்சாட்டும் இல்லாத ஆட்சி செய்தார்… உலக தமிழ் மாநாடு நடத்தினார்…அவருக்கு பின் வந்த திராவிஷ முதல்வர்களை போல் அல்லாமல் தன் குடும்பத்திற்கு என ஒன்றும் செய்ய வில்லை.


JaiRam
ஜூலை 05, 2025 20:10

அன்னதானம் வழங்குவது அதில் கொஞ்சம் கோயில் பணத்தை ஆட்டையை போடத்தான்


Suresh Sivakumar
ஜூலை 05, 2025 05:17

Annadurai was at best a corrupted opportunist. Unfit to be even remembered


Yes God
ஜூலை 05, 2025 03:08

சாமி கும்பிடுறவன் பைத்தியகாரன். ராம சாமி மட்டும் தான் அறிவாளியா.பெயரை ஏன் மாத்தவில்லை.


Yes God
ஜூலை 05, 2025 03:03

வாலிப ராமசாமி பிராம்மண தோற்றத்தில் காசி பிராம்மண அன்னசத்திரத்தில் திருட்டு தனமா பூந்து பிராம்மண பந்தியில் சாப்பிட பார்த்தவர் அவர் எப்படி மற்றவர்க்கு அன்ன தானம் செய்வார்.


Yes God
ஜூலை 05, 2025 02:52

எவண்டா சொன்னான் இது ராமசாமி மண்ணுன்னு. இங்குதான் மண் இருக்கு. வேறெங்கும் இல்லையா ஏண்டா ஏமாத்தறீங்க.


Yes God
ஜூலை 05, 2025 02:45

அயோக்யர்கள் கேப் மாரிகள் சோமாரிகள் முள்ளமாரிகள் முடிச்சு மாரிகள் ஆரியரிடத்தில் இல்லை திராவிடன் பிராண்டில் வயிறு வளர்க்கும் சில குரூப்களில் உள்ளனர்.


Yes God
ஜூலை 05, 2025 02:34

அண்ணா துரை ஏதில் ஆறிஞர். ராமசாமி யாருடைய தந்தை. திராவிடம் உலகில் எங்குள்ளது.


sivan
ஜூலை 04, 2025 21:04

யார் சொன்னார்கள் அவர் அறிஞர் என்று?? அவர்களுக்குள்ளேயே ஒவ்வொரு பட்டம் கொடுத்து கொண்டார்கள்


panneer selvam
ஜூலை 04, 2025 16:09

After Temple money is nothing but Hindus money so Minister Sekar Babu has the right to loot as per Dravidian Principle .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை