உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க கட்டணம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க கட்டணம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை வழங்கியுள்ளது.தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்., 21க்குள் அகற்ற ஐகோர்ட் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. ஏனெனில், பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொடிக்கம்பம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜன.,யில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மேலும், கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜூலை 2க்குள் கொடிக்கம்பங்கள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டியது வரும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sundaresan S
ஜூன் 19, 2025 17:12

பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அமைக்க கட்டணம் வசூலிக்கலாம் என்ற நீதிமன்ற யோசனை தொலைநோக்கு சிந்தனை கொண்டது அல்ல.புதிய ஊழலை உருவாக்கும்.


lana
ஜூன் 18, 2025 22:03

இவர்கள் மாதம் ஒருமுறை தீர்ப்பு கருத்து ன்னு மாத்தி மாத்தி சொல்லு வது க்கு பதில் ஒழுங்கா தீர்ப்பை சொல்லுங்க. அப்புறம் 1 ருபாய் கட்டணம் ன்னு சட்டம் கொண்டு வரப்படும். இதுக்கு கையெழுத்து போட வில்லை ன்னு கவர்னர் மேல ஒரு case போடுவார்கள். இதுக்கு உருப்படியான வழக்கு எடுத்து விசாரிக்கவும். இந்த வழக்கில் தீர்ப்பு செல்லும் தைரியம் இந்த கோர்ட் க்கு இல்லை


Nesan
ஜூன் 18, 2025 21:13

மிக கொடுமையான யோசனை... பொது இடத்துக்கு கட்டணம் செலுத்திவிடால், ஏழைகள் குடுசை போட்டுக்கொள்ளாமா?. வேறு தொழிலும் நடத்தலாமா???. என்ன அருமையான யோசனை அய்யா ....


Rajan A
ஜூன் 18, 2025 20:54

சூப்பர்


நிவேதா
ஜூன் 18, 2025 19:46

கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். இல்லையேல் வாடகை பணத்தை கொடுத்து விட்டு நீதிமன்றத்திலேயே கட்சிக்கொடி ஏற்றிவிடுவார்கள்


nagendhiran
ஜூன் 18, 2025 19:41

அதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?


kgb
ஜூன் 18, 2025 19:24

collect caution depostit for place rent/hr basis + garbage cleanning+ pandakal hole filling ges , paid to respective panchayat/municipality.


Sivak
ஜூன் 18, 2025 19:20

முட்டாள்தனமான பரிந்துரை ....


Haribabu Poornachari
ஜூன் 18, 2025 19:18

அப்படியே நாட்டில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கும் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கட்டணம் கொடுக்கவில்லை என்றால் , அதை நீக்கி குப்பை தொட்டியில் போட வேண்டும்


sridhar
ஜூன் 18, 2025 18:58

சிந்தனை அற்ற தீர்ப்பு. எல்லா கட்சிகளும் பணத்தில் புரளுகின்றன . வாடகை ஒரு பிரச்சினை இல்லை . கொடி கம்பங்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.


Sivak
ஜூன் 18, 2025 19:20

உண்மை ... கட்சிகளுக்கு காசு ஒரு மேட்டரா ? காசு குடுத்தோம்னு ஒரு கட்சி ஆபீஸ் கட்டிடுவானுங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை