உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

சென்னை : மாநில ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது; ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இடங்கள் பெற்ற பின், தமிழக கல்லுாரிகளை கைவிடுகின்றனர்.அதேபோல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலையில் இடம் பெற்று சென்றுள்ளனர்.அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 59 எம்.பி.பி.எஸ்., - 62 பி.டி.எஸ்., மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 503 எம்.பி.பி.எஸ்., - 519 பி.டி.எஸ்., என, மொத்தம் 1143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக இயக்குனர் சங்குமணி கூறுகையில், ''அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றதால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றவர்கள், அதை வேண்டாம் என்று திரும்ப ஒப்படைத்து உள்ளனர். இந்த இடங்கள், அடுத்தகட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
அக் 18, 2024 16:45

எல்லாக் கட்டணங்களையும் அரசே நிர்ணயித்து, வசூலித்து பிறகு அவற்றை நிர்வாகங்களுக்கு கொடுக்கலாம். கூடுதலாக வசூலித்த கல்லூரிகளை அரசுடமையாக்க தயக்கமேன்?


Sridhar
அக் 18, 2024 13:16

நம்ம ஆளுங்க ரொம்பவே சந்தோசமா அந்த இடங்களை ரொப்பி கல்லா கட்டிருவானுங்களே? ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொற்காசுகளாச்சே ஏன் தமிழகத்தில் மட்டும் அதிக கட்டணம்ங்கறத பத்தி திருட்டு கும்பல் விளக்கம் கொடுக்கணும். அனிதா உயிரோட இருந்திருந்தா இவ்வளவு லச்சம் கொடுத்துதான் சீட்டு வாங்கியிருக்க முடியுமா? அவுங்க குடும்பம் அவ்வளவு வசதியானதா? இருக்கும், சாதாரண ஆட்கள் எல்லாம் supreme கோர்ட்டுக்கு போயி கேஸ் போட்டு வாதாடமுடியுமா என்ன?


S Sivakumar
அக் 18, 2024 12:18

அரசின் இயலாமை மக்களின் பணம் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் முலமாக கொள்ளை அடிக்க படுகிறது. மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் முதல்வர் தலையீடு இன்றி இருக்கும் பட்சத்தில் இப்படி நடக்கிறது. நடவடிக்கைகள் முற்றிலும் இல்லை.


sundaran manogaran
அக் 18, 2024 11:33

இப்போ புரியுதா ஏன் நீட்வேண்டாம். என்று தமிழகத்தில் மட்டும் கூப்பாடு போடுகிறார்கள் என்று


Nandakumar Naidu.
அக் 18, 2024 08:47

எம்பிபிஎஸ் சீட்டிற்கு அரசு நிர்ணயத்த தொகையை விட அதிகம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகளை நிரந்தரமாக மூட வேண்டும்.


nv
அக் 18, 2024 07:40

தமிழக மக்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.. NEET வைத்தும் யார் ஏழை மக்களுக்கு சூனியம் வைப்பது என்று? திராவிட கும்பலை நம்பினால் நாமம் தான்


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 18, 2024 07:29

தீய மூர்க்கர் மற்றும் அகில இந்திய மூர்க்கர்களின் அவலட்சணங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து சந்திசிரிக்கிறது . மூர்க்கனின் நீட் கபடநாடகம் மற்றும் அடாவடி அரசு கட்டண வசூல் வேட்டையால் மருத்துவப்படிப்பு தமிழகத்தில் எட்டாக்கனி .


pandit
அக் 18, 2024 07:03

திராவிஷ மாடல் நீட் ஒழிப்பு


guru samy
அக் 18, 2024 10:31

இதற்கு முந்தைய ஆட்சியில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை யா?


Lion Drsekar
அக் 18, 2024 06:46

புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம், காய்ந்துபோன மரம் மழைக்காலங்களில் துளிர்விட்டு வளரும், விவசாய நிலங்களை மிரட்டி, கட்டிடம் கட்டியதே மக்களுக்கு சேவைசெய்ய ஆகவே கொக்கு போல், தொண்டில் வீசியவர்கள் போல், காத்திருப்பது இலவு காத்த கிளி அல்ல, இது நிஜம். நிஜம் என்றால் பணம், பணம் பத்தும் செய்யும், சேர மறுத்தவர்கள் வரவில்லை என்றால், இரயில்வே முன்பதிவு waiting லிஸ்ட் போல் பணம் கொடுப்பவர்களுக்கு வழங்ப்படும், இதுதான் விஞ்ஞான முறையில் செயல்படும் நவீன உத்தி


Muthu Kumaran
அக் 18, 2024 06:32

Tamil Nādu private colleges must reduce their fees. this is main advantages on NEET exam


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை