பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை
சென்னை:'பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுச்செயலர் மாரிமுத்து கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக நெடுஞ்சாலைத் துறையில், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். துறை பொறியியல் பணி விதிகளின்படி, மாறி மாறி பணியாற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளன. இதனால், மன உளைச்சலுக்கு பொறியாளர்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு பொது பணியிட மாறுதல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.