உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5.60 லட்சம் லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

ரூ.5.60 லட்சம் லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், புகார்கள் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்துவது வழக்கமாகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ntoitfv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் ( தரக்கட்டுப்பாட்டு பிரிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.5.60 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 04, 2025 18:42

இலஞ்சம் என்பது இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் உள்ளது. சில மாநில அரசுகள் குறைக்க முயற்சி எடுக்கிறார்கள் சில மாநில கட்சிகள் அதனை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஒன்றிய அரசு எனும் மத்திய அரசு குறைக்க முயற்சி செய்தாலும் பல மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை.


chinnamanibalan
மார் 04, 2025 10:51

தமிழக அரசுத் துறைகளில் லஞ்சமின்றி அணுவும் அசைவது இல்லை. லஞ்சம் வழங்க தயாராக இல்லாதவர்களின் கோப்புகள் காணாமல் போய் விடுகின்றன.


நிக்கோல்தாம்சன்
மார் 04, 2025 08:19

அவர்களுக்கு சுகர் வரட்டும்


Kasimani Baskaran
மார் 04, 2025 05:32

கொஞ்ச நாள் ஏதாவது ஒரு பதவியில் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டு பின்னர் இதை விட பசையுள்ள பதவிக்கு வருவார்கள்.


அப்பாவி
மார் 03, 2025 22:48

திருட்டு திராவிடனுங்க புற்றுநோய் போல தமிழகத்தில் எல்லா துறைகளிலும் பரவிட்டாங்க. இனிமே தேறுமாங்கறது டவுட்டுதான் தனபாலு.


Oru Indiyan
மார் 03, 2025 22:29

லஞ்சம் கொடுத்த மாக்களையும் கைது செய்யுங்கள்


Saai Sundharamurthy AVK
மார் 03, 2025 22:27

திமுக ஆட்சியே ஊழல் ஆட்சி. அதிகாரிகளும் பேய்களாக மாறி விட்டனர். அமைச்சர் ஏ.வ.வேலு மகாமட்டமான அமைச்சர் என்று அந்த ஊர் மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தமிழக முதல்வரே Waste !!!


Raghavan
மார் 03, 2025 22:15

ஒரு நாள் சோதனைக்கே இவ்வளவு பணம் என்றால் ஒருவருடத்துக்கு எவ்வளவு? இந்த வழக்குகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு வர குறைந்தது ஒரு 20 வருடங்கள் ஆகும். இவர்களை பணியிடை நீக்கம் செய்வதுபோல் செய்துவிட்டு மேல் மட்டம் வரை சென்று ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துவிட்டு வேலைக்கும் சேர்ந்துவிடுவார்கள். வழக்கு முடிவதற்குள் இதை விட 1000 மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். நீதிமன்றமும் இவர்களை அரசு தரப்பில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் விடுதலை என்று சொல்லிவிடுவார்கள். இதல்லாம் ஒரு கண் துடைப்பு வேலை. ஜனங்களை ....டாள் ஆக்குவதற்கு.


balakrishnankalpana
மார் 03, 2025 22:10

அவர்களுக்கு உயர்வு உண்டு


MARUTHU PANDIAR
மார் 03, 2025 22:02

விசாரணையெல்லாம் கெடக்கட்டுங்க .அந்தப் பணம் 24 மணி நேரத்தில் அரசுக்கு கருவூலத்தில் சேர்க்கப் பட்டது என்ற செய்தி வருமா? இது வரை அப்படி ஏதாவது வந்துள்ளதா ? என்று கேட்கிறார்கள். .


புதிய வீடியோ