திண்டிவனத்தில் நடைபயணம்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், அன்புமணி திண்டிவனத்தில் நாளை நடைபயணம் மேற்கொள்கிறார். 'உரிமையை மீட்க... தலைமுறை காக்க' என்ற தலைப்பில், மாலை 6:00 மணிக்கு இந்த நடைபயணம் நடைபெறுகிறது. இதற்காக, அன்புமணி ஆதரவாளர்கள் ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர். அவற்றில், அன்புமணி படத்துடன் ராமதாஸ் படமும் பிரதானமாக இடம் பெற்றுள்ளது.