உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்த 80,000 பேர் பங்கேற்பு

ஹிந்தி தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்த 80,000 பேர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்தி பிரசார சபா சார்பில், நேற்று நடந்த அடிப்படை ஹிந்தி தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்த 80,000 பேர் ஆர்வ முடன் பங்கேற்றனர். நாட்டில் ஹிந்தி மொழியை பரவலாக்க, ஹிந்தி பிரசார சபாக்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில், தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபாக்கள் இயங்குகின்றன. இவற்றின் சார்பில் வழங்கப்படும் பாடத்திட்டங்களை, ஹிந்தி பண்டிட் கள், ஆர்வம் உள்ளோ ருக்கு கற்பிக்கின்றனர். கற்போரின் திறமையை அங்கீகரிக்க, எட்டு விதமான தேர்வுகளை ஹிந்தி பிரசார சபா நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை, ஹிந்தி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த 9, 10ம் தேதிகளில், உயர்நிலை தேர்வுகள் நடந்தன. நேற்று பரிட்சயா, பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா போன்ற அடிப்படை தேர்வுகள் நடந்தன. அதில், சென்னையில், 35,000 பேர் உட்பட, தமிழ கம் முழுதும் 80,000 பேர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். அடுத்த தேர்வுகள், 2026 பிப்ர வரியில் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஆக 25, 2025 19:47

ஹிந்தி படிக்க ஆர்வம் உள்ள எண்பதாயிரம் பேர்களை படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக ஆர்வமும் தேவையும் இல்லாத எண்பது லட்சம் பேர் மீது ஹிந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்!


V RAMASWAMY
ஆக 25, 2025 10:08

பங்கேற்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களை முன்னோடியாக வைத்துக்கொண்டு இந்தி படிக்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள் இன்னும் அதிகமாக சேரவேண்டும்.


vbs manian
ஆக 25, 2025 08:47

சபாஷ். மக்களின் இயல்பான தன்னிச்சையான ஆர்வத்துக்கு யாரும் தடை போடமுடியாது.


K V Ramadoss
ஆக 25, 2025 08:39

தமிழ் பிரசார சபா என்று நாடு முழுவதும், எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தலாமே, தமிழ்நாட்டு அரசு.. இதைவிட மேலாக தமிழ் வளர்ச்சிக்கு வேறு என்ன செய்யமுடியும். ?


Priyan Vadanad
ஆக 25, 2025 05:51

ரொம்ப முக்கியம்.


vivek
ஆக 25, 2025 06:45

உன்னை போல வாயால் வடை சுடாமல் அவர்கள் பிழைத்துக்கொள்ளடும் பிரியன்...நீ வாழ்நாள் கொத்தடிமையாகவே இரு...யார் தடுத்தார்


Raman
ஆக 25, 2025 10:36

You are still at LKG?


Iyer
ஆக 25, 2025 05:40

ஹிந்தி நமது பாரத்தின் இணைப்பு மொழி. தமிழுக்கும் ஹிந்திக்கும் 40% பொது சொற்கள் உண்டு. நாம் அனைவரும் ஹிந்தி கற்பது அவசியம்


Palanisamy Sekar
ஆக 25, 2025 05:35

உலகத்திலேயே ஒரு மொழியை கற்க தடைபோடுகின்ற ஒரே அரசு இந்த திருட்டு மாடல் அரசு மட்டும்தான். பக்கத்துக்கு மாநிலங்களில் மூன்று மொழி பேசுகின்றார்கள். கேரளா கர்நாடக என்று. இங்கே குடியும் கஞ்சாவுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி ஹிந்தியை பயில துடிக்கின்ற இந்த மாணவ செல்வங்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவார்கள். ஹிந்தியை எதிர்க்கின்ற கும்பல்கள் வெட்டிக்கோ கட்டிக்கோ என்று தலைவன் சொல்வதை கேட்டு ஜெயிலில் நிரம்ப இருக்கின்றார்கள். படிப்போருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். அடுத்த சட்டமனற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஹிந்தியை கற்க தடையே இருக்காது. காரணம் திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும். பின்னர் தடைகள் எல்லாமே தூள் தூளாகிவிடும்


Padmasridharan
ஆக 25, 2025 05:28

தமிழர்கள் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பவர்கள் இல்லை என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ह्रिंदि பேசத்தெரிந்தவர்கள் தமிழர்களை பற்றி சில அரசதிகாரிகளால் தவறாக பார்க்கபடுகிறார்கள், அவ்வளவே जी.


Mani . V
ஆக 25, 2025 05:27

இதில் முக்கால்வாசிப் பேர் திமுக வினர் நடத்தும் பள்ளிகளை சேர்ந்தவர்கள். அப்படித்தானே சோமபானத்துக்கு எதிராகப் போராடும் கனிமொழி மேடம்?


NACHI
ஆக 25, 2025 05:16

நன்றி மக்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை