உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து கடவுள் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது

ஹிந்து கடவுள் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது

கோவை: கோவை ராமநாதபுரம், கிருஷ்ணர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் ஜெரோம் பென்ஹர், 26. இவரது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கத்தில் ‘பெஹர் ஜெர்ரி’ என்ற பெயரில், ஹிந்து மத கடவுள், மத நம்பிக்கை, கோவில்கள், ஹிந்து இயக்கங்கள் குறித்து இழிவான, அவதுாறான கருத்தை பதிவிட்டு வந்தார். ஹிந்து கடவுள்களை தவறாக விமர்சித்திருந்தார். இவரது முகநுால் பக்கத்தை தற்செயலாக பார்த்த, ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர், சதீஷ் அதிர்ச்சியடைந்தார். ஹிந்து முன்னணி நிர்வாகிகளுடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மத நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட ஜெரோம் பென்ஹரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
அக் 27, 2026 07:38

இந்த மாதிரி மத மாற்ற கும்பலையும் விரட்டி அடிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்கணும்


Vasan
அக் 27, 2026 05:36

ஸ்டாலினை இராமபிரானுடன் ஒப்பிட்டு, அதன் மூலம் இராமபிரானை இழிவு படுத்திய லியோனி தான் கைதோ என்று நினைத்து நான் சில வினாடிகள் சந்தோஷப்பட்டேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை