உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டிவனத்தில் இந்து முன்னணி நிர்வாகி கைது

திண்டிவனத்தில் இந்து முன்னணி நிர்வாகி கைது

திண்டிவனம்: இரு சமூகத்தினரி டையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் பதிவிட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நவாப் மஸ்ஜித் தலைவர் அஜ்மல் அலி மற்றும் அனைத்து பள்ளி வாசல், முத்தவல்லிகள், ஜமத்தார்கள் சார்பில் திண்டிவனம் போலீசில் நேற்று மதியம் புகார் அளித்தனர்.அதில், ''திண்டிவனத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து, முஸ்லீம் மக்களிடையே விரோத்தை துாண்டும் வகையில், அமைதியை சீர் குலைக்கும் வகையில் தனது முகநுாலில் கடந்த 16 ம் தேதி பதிவிட்டிருந்தார்.இரு சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் வெளியிட்டுள்ள பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுவை நேற்று இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Gopalakrishnan
ஜன 18, 2024 07:02

இதே வேகத்தையும் முனைப்பும் குடிநீரில் மலம் கலந்தவர்களை கண்டு பிடித்து கைது செய்வதில் ஏன் காவல்துறை காட்டவில்லை ?


Kanakala Subbudu
ஜன 18, 2024 06:47

போலீஸ் இந்த விஷயத்தில் ரொம்ப சுறுசுறுப்பு. இந்து முன்னணி, பிஜேபி மீதெல்லாம் யாராவது புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை, கைது. வேற மதத்தினர் மீதென்றால் விசாரணை செய்து ஒன்றும் இல்லை என்று பூசி மூடி விடுவார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை