உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இணையாக, அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையார் சன்னிதிக்கு இடதுபுறம் செயல் அலுவலர் அலுவலகமும், வலது புறம் அறங்காவலர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வத்திற்கு இணையாக, செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவினரும் அமர்ந்து பணியாற்றுவது அநியாயம். நாத்திகவாதிகள் கூட செய்ய தயங்கும் இந்த கொடும் செயலை, இந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இக்கோவிலில் ஏற்கனவே இரண்டு அலுவலகங்கள் இருக்கும் போது, பிள்ளையார் சன்னிதிக்கு இணையாக, புதிதாக இரண்டு அலுவலகங்கள் அமை த்தது எப்படி? உடனடியாக இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ