வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுவும் தேவையில்லை ..... வக்ஃப் என்கிற பெயரில் அபகரிப்பும் தேவையில்லை .....
don't believe the Mukkas
பல்லடம் : பல்லடம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.திருப்பூர் மாவட்டம், பல்லடம், கடைவீதியில் பிரசித்தி பெற்ற பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:15 மணிக்கு நடக்கிறது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் நடத்திவைக்கிறார். முன்னதாக, டிச., 3 அன்று மூத்த பிள்ளையார் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்விகள் நிறைவுற்றன. இன்று காலை நான்காம் கால வேள்வி வழிபாட்டை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்; இதற்கேற்ப அன்னதானம், பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், நேற்று மாலை, இஸ்லாமியர்கள், பொங்காளியம்மனுக்கு சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். விழா குழுவினர் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.
இதுவும் தேவையில்லை ..... வக்ஃப் என்கிற பெயரில் அபகரிப்பும் தேவையில்லை .....
don't believe the Mukkas