பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:பெஞ்சல் புயல் காரணமாக கடலுார் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று 3ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.