உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.,13) விடுமுறை

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.,13) விடுமுறை

திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம், தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pkwg0ir7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாளையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் மட்டும்

திருநெல்வேலிதென்காசிமாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள்

விழுப்புரம்தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.தூத்துக்குடியில் பல்கலைக்கழக தேர்வு வழக்கம் போல் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nb
டிச 12, 2024 22:37

சென்னை மாணவர்கள் நாளை சாக்கடையில் நடந்து செல்ல வேண்டியதுதான்


kantharvan
டிச 12, 2024 23:22

ஏன் ? மிதந்து செல்லுங்கள். தண்ணீரில்தான்


Raja
டிச 12, 2024 21:57

இன்று கூட தென்காசி மாவட்டத்தில் காலையில் பள்ளிக்கு மாணவ மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை