உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

சென்னை: தமிழகத்தில், 14,000க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களிலும், வெள்ளம், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களிலும், போலீசாருக்கு உதவியாக இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் . ஊர்க்காவல் படையினர், தங்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலனை செய்த அரசு, ஊர்க்காவல் படையினரின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை