உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லடத்தில் கல்லுாரி மாணவி ஆணவ கொலை; விசாரணையில் அம்பலம்!

பல்லடத்தில் கல்லுாரி மாணவி ஆணவ கொலை; விசாரணையில் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் பல்லடத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்பிறந்த தங்கையை அண்ணனே ஆணவக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி விசைத்தறி தொழிலாளி. தம்பதிக்கு வித்யா என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவையில் உள்ள அரசு கல்லுாரியில் எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5xo6gmd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த, 30ம் தேதி பெற்றோர் சர்ச்சுக்கு சென்றனர். அவரது அண்ணன் வெளியில் சென்ற நிலையில், வித்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். பெற்றோர் மதியம் வீட்டுக்கு திரும்பிய போது, வித்யாவின் மீது பீரோ சரிந்து விழுந்து இருந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வித்யா இறந்தது உறுதி செய்யப்பட்டது. வித்யாவின் சடலத்தை தோண்டியெடுத்து, மயானத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவியை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே ஆணவக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் செய்ததால் தங்கையை அண்ணன் கொலை செய்துள்ளான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nachiar
ஏப் 02, 2025 17:26

எப்படி புனிதம் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது. பெற்று வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள். எவ்வளவு தியாகங்கள் நடந்து இருக்கும். திடீர் என்று நேற்று வந்தவன் ஐ லவ் யு என்றது எல்லாம் மறந்து உதறி விட்டால் எப்படி காதல் புனிதம் ஆகும். நிச்சயமாக தமிழில் சொல்லி இருக்க மாட்டான். பாலூட்டும் போதும் சோறு ஊட்டும் போதும் பாழாப்போன பார்த்துக் பார்த்துக் கொண்டு ஊட்டுவதால் வரும் வினைகள் தான். சினிமா அழிந்தால் நாடு உருப்படும். ஜெய் பாரத்


Sundar Pas
ஏப் 02, 2025 14:08

மற்ற மதங்களில் ஜாதி பேதம் கிடையாது என்று சொல்கிறவர்களே. அது பச்சைப் பொய் என்பது இத்தோடு சேர்த்து எத்தனை தடவை நிரூபணம் ஆகி உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா. மதம் மாறினார்கள். ஆனால் பேரை மாற்றவி்ல்லை. ஜாதி உணர்வை மாற்றவில்லை. மனம் மாறவில்லை. ஆனால் மதம் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். இரண்டுமே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்து மதத்திலிருந்து மதமாற்றம் என்பதே பக்கா பிராடு வேலை. அதைச் செய்யும் கும்பல்கள் கேடுகெட்ட மோசடிக் கூட்டம். - நன்றி


Anand
ஏப் 02, 2025 12:11

அவர்கள் கிருஸ்துவர்கள் பிறகெப்படி ஆணவ கொலை?


theruvasagan
ஏப் 02, 2025 10:49

மற்ற மதங்களில் ஜாதி பேதம் கிடையாது என்று சொல்கிறவர்களே. அது பச்சைப் பொய் என்பது இத்தோடு சேர்த்து எத்தனை தடவை நிரூபணம் ஆகி உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா. மதம் மாறினார்கள். ஆனால் பேரை மாற்றவி்ல்லை. ஜாதி உணர்வை மாற்றவில்லை. மனம் மாறவில்லை. ஆனால் மதம் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். இரண்டுமே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்து மதத்திலிருந்து மதமாற்றம் என்பதே பக்கா பிராடு வேலை. அதைச் செய்யும் கும்பல்கள் கேடுகெட்ட மோசடிக் கூட்டம்.


மூர்க்கன்
ஏப் 02, 2025 11:56

மதம் பெரிய விஷயமல்ல ஆனால் ஜாதி விஷம் என்பதுதானே நிரூபணமாகி உள்ளது.


RAM IYER
ஏப் 02, 2025 14:11

SUPPOSE TO ANSWER FOR THIS


makesh
ஏப் 02, 2025 10:44

காதல் புனிதமானதுதான் ஆனால் அது நம் வீட்டுக்கு நுழையும்வரை மட்டுமே... காதல் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று சட்டம் போட்டால் ஒரு பொண்ணும் காதலிக்காது


Keshavan.J
ஏப் 02, 2025 11:28

என்ன ஒரு புதிசாலித்தனம்.


தமிழ்வேள்
ஏப் 02, 2025 10:41

கொலையான மாணவி பெயர் வித்யா. சுத்தமான ஹிந்து பெயர் .. ஆனால் ஹிந்து என்ற சான்றிதழை வைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களாகி பொய்கூறி பிற ஹிந்துக்களின் சலுகைகளை பார்ப்பவர்கள் ..நியாயமாக இந்த குடும்பத்தையே 420 கேஸுக்கு இலக்காக்கி உள்ளே தள்ள வேண்டும் ......விடியல் அரசு செய்யாது


KavikumarRam
ஏப் 02, 2025 10:19

வித்யா, சரவணன், தண்டபாணி, விவரமா மனைவி பெயர மறச்சிட்டானுங்க. ஆனா சர்ச்சு. மொத்ததுல இந்த மோசடி குடும்பம் மொத்தமும் தூக்கணும். இந்த மாதிரி ஈனப்பிறவிகளால் உண்மையிலேயே இடஒதுக்கீடு கிடைப்பெறவேண்டிய தகுதியான இந்துக்கள் பின் தங்க வைக்கப்படுகிறார்கள்.


சுதர்சன்
ஏப் 02, 2025 09:59

என்ன பித்தலாட்டம் இது. தமிழ் பெயர்களுடன் கிருத்துவ குடும்பம்.


Svs Yaadum oore
ஏப் 02, 2025 09:19

மதம் மாறி விட்டு பெயரை மட்டும் மாற்றாமல் அடுத்தவன் சலுகைகளை பறிக்கும் கும்பல். வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் செய்ததால் தங்கையை அண்ணன் கொலை செய்துள்ளானாம். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும்தான் ஜாதி உள்ளது. மற்ற மதங்களில் கிடையாது என்பது திராவிட ராமசாமி தத்துவம். சமூக நீதி மத சார்பின்மையை திராவிடம் எப்போதும் விட்டு கொடுக்காது ....


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 09:15

சாதிவெறிக்கு மதம் காரணமல்ல என்றாகிறது.


புதிய வீடியோ