உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்தத்தில் சிக்கிய ஓசூர் விமான நிலைய திட்டம்; தடையில்லா சான்று கிடைத்தால் தான் விமோசனம்

ஒப்பந்தத்தில் சிக்கிய ஓசூர் விமான நிலைய திட்டம்; தடையில்லா சான்று கிடைத்தால் தான் விமோசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இடையே, 2008ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி

தமிழகத்தில், சென்னை, கோவைக்கு பின், தொழில்கள் நிறைந்த நகரமாக ஓசூர் மாறி வருகிறது. தொழில், வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக பலர் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களுக்கு உதவ, பெங்களூரு விமான நிலையம் தான் உள்ளது. ஆனால், பெங்களூரில் இறங்கி, 75 கி.மீ., துாரம் பயணித்து, ஓசூர் வர வேண்டியுள்ளதால் மூன்று மணி நேரம் வரை ஆகிறது.இதையடுத்து ஓசூரில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு சட்டசபையில் அறிவித்தார். அதன்பின், ஓசூரில் ஏர்போர்ட் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் வேகம் எடுத்தன. முதலில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என, இரு இடங்களை தேர்வு செய்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவிடம், ஏ.ஏ.ஐ., எனப்படும் விமான நிலைய ஆணையம் சமர்பித்தது.என்னதான் இடங்களை தேர்வு செய்தாலும், தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியாக, பெங்களூரு விமான நிலையம் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து, கடந்த 2008ல் செய்த ஒப்பந்தம் இருந்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில், 'கமர்ஷியல்' காரணத்திற்காக, 25 ஆண்டுகள் அதாவது, 2033 வரை எந்த விமான நிலையமும் பெங்களூரு ஏர்போர்ட்டை சுற்றி, 150 கி.மீ., தொலைவுக்குள் புதிதாக கட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.இந்த ஒப்பந்தம், தமிழக அரசுக்கு தெரியாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி, தமிழக அரசிடம் கருத்தும் கேட்கப்படவில்லை; அரசும் கண்டுகொள்ளவில்லை.

புயல் வேகம்

இதனால், இடம் கண்டறியும் பணிகள் புயல் வேகத்தில் நடந்தாலும், அடுத்த எட்டு ஆண்டுக்குள், ஓசூர் விமான நிலையம் அமைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள். இது குறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது: மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும், பெங்களூரு தனியார் விமான நிலைய நிர்வாகமும், 2008ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, 25 ஆண்டுகளுக்கு பெங்களூரு ஏர்போர்ட்டை சுற்றி, 150 கி.மீ., தொலைவுக்குள் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு விமான நிலையம் அமைக்க முடியாது.

வழக்கு தொடரலாம்

ஆனால் மைசூரு, ஹாசன் விமான நிலையங்கள் மட்டும் இயங்கலாம். அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஓசூரில், போதுமான அளவுக்கு நிலங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கையகப்படுத்தினாலும், தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.தமிழக அரசு நிலம் கண்டறிய துவங்கியபோதே, பெங்களூரு ஏர்போர்ட் தரப்பில் நேரடி யாக அமைச்சகத்திடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.இந்த ஒப்பந்தம், தமிழகத்தின் வளர்ச்சியை திட்டுமிட்டு பின்னுக்கு தள்ளும் வகையில் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. தனியார் விமான நிலையத்திற்காக, ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும் வகையில், மத்திய அரசு எப்படி இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தது என தெரியவில்லை. தமிழக அரசு இடம் தேர்வு செய்து, குறித்த நேரத்தில் பணிகளை துவங்க வேண்டும் என்றால், நேரடியாக மத்திய அமைச்சகத்திடம் பேசி தடையில்லா சான்று வாங்க வேண்டும். இல்லையெனில், ஒப்பந்தத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இதிலும் தமிழக அரசு மவுனமாக இருந்தால், ஓசூரில் விமான நிலையம் வருவது கனவாக மாறிவிடும். தனியார் விமான நிலையத்தின் அனுமதிக்காக, அரசு கைகட்டி நிற்பதுபோல ஆகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடனடி தீர்வு என்ன?

ஓசூரில் விமான நிலையம் புததிாக அமைக்க, முதலில் நிலம் அடையாளம் காணப்பட்டு, சூற்றுச்சூழல் அனுமதி பெறுவது போன்ற பல நடைமுறைகள் உள்ளன. இதற்கு, குறைந்தது நான்கு ஆண்டுகளாகும். மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சட்ட சிக்கல்களும் வரலாம். மிகுந்த பொருட்செலவும் ஏற்படும்.பணிகள் துவங்கினாலும் பெங்களூரு ஏர்போர்ட் நெருக்கடி தரும். இதற்கு, உடனடி தீர்வாக, 'தனேஜா ஏரோஸ்பேஸ்'நிறுவனத்திடம், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு ஒப்பந்தம் போடலாம். இது சாத்தியமானால், உடனடியாக விமானங்களை இயக்கலாம்.அந்நிறுவனத்திடம், 7,111 அடியிலான ஒடுபாதைகள் இயக்கும் நிலையில் உள்ளன. தற்காலிகமாக ஒரு முனையத்தை அமைத்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமான, ஏ.டி.சி.,யை நவீனப்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் வணிக ரீதியாக விமான சேவை துவங்க வாய்ப்புள்ளது - எச்.உபையதுல்லா, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Suppan
ஜூலை 16, 2025 16:44

கையிலே காசில்லை என்று ஒப்பாரி. ஆனாலும் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு விடியல் மக்களை ஏமாற்ற இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையெல்லாம் நம்பும் மக்களே அறிவிலிகள்


naranam
ஜூலை 16, 2025 14:44

கல்வி நிதி தரவில்லை நீட் தேர்வு விலக்கு இல்லவே இல்லை வெள்ள நிவாரண நிதி வரவில்லை எய்ம்ஸ் தாமதம் கீழடி பற்றிய மேலும் சில தரவுகளைக் கேட்டால் மத்திய அரசு வேண்டுமென்றே கேட்கிறது சமஸ்கிருதத்தை ஊக்குவித்து தமிழை ஒழித்துக் கட்ட மத்திய அரசு முயற்சி என்று மக்களை ஏமாற்றுவது மட்டுமே திமுக முதல்வரின் வேலை என்பதை சோற்றாலடித்த பிண்டங்கள் புரிந்து கொள்ளாதவரை இந்தக் கொள்ளை ஆட்சி தான் தொடரும்.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 16, 2025 13:34

ஓசூர் விமானநிலையத்துக்கு தடையில்லா விமோசனம் கிடைக்கும்


Ramesh Sargam
ஜூலை 16, 2025 12:28

ஓசூர் விமான நிலைய திட்டம் ஒரு சிறப்பான திட்டம். ஓசூர், கிருஷ்ணகிரி, மற்றும் சுற்றுவட்டார தமிழக ஊர்கள் இதனால் மிக மிக பயன் அடையும். அதைவிட பெரிய பலன் அல்லது அதற்கு ஈடான பலன் ஓசூருக்கு அருகில் உள்ள தமிழ்நாடு கர்நாடக எல்லையில் பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, பெங்களூரு கிழக்கு பகுதி மக்களுக்கு அந்த ஓசூர் விமான நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பொழுது அங்கு வசிப்பவர்கள் தேவனஹள்ளியில் உள்ள விமானநிலையத்துக்கு செல்ல குறைந்தது இரண்டு மணிநேரம், போக்குவரத்து அதிக நேரங்களில் மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் ஓசூர் விமான நிலையம் அமைந்தால் நான் குறிப்பிட்ட அந்த பெங்களூரு பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகாது.


ديفيد رافائيل
ஜூலை 16, 2025 12:01

ஆரம்பிக்குறதுக்கே NOC வேண்டுமே அதான் இங்கு உள்ள பிரச்சினையே. தமிழக அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளா தன்மை தான் இதுக்கு முக்கிய காரணம்.


Varadarajan Nagarajan
ஜூலை 16, 2025 10:57

ஓசூரில் SIPCOT மூலம் தொழிற்பேட்டை 1 மற்றும் 2 அமைத்து தொழிற்சாலைகள் 30 - 40 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அப்படியிருக்கும்போது ஓசூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டம் நமது தமிழக அரசிடம் இருந்திருந்தால் பெங்களூர் தனியார் விமான நிலையம் அமைக்க அனுமதிகேட்டபோதே தமிழகம் ஆட்சேபனை அல்லது பாதகமான அம்சங்களை நீக்க நடவடிக்கை யெடுத்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு தற்பொழுது மத்திய அரசுமீது புகார்சொல்ல என்ன உரிமை உள்ளது. தமிழகத்தில் புதிய விமான நிலையங்களை கொண்டுவர தற்போதைய ஆட்சி முனைப்புக்கட்டுவதற்கு வேறு காரணங்கள் இருப்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும். இந்த திட்ட அறிவிப்பு வருவதற்குமுன்பே தேவையான அளவு நிலங்களை அரசியவாதிகளின் நிறுவனங்கள் வளைத்துபோட்டாச்சு. இது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும்


D Natarajan
ஜூலை 16, 2025 10:48

2033 தானே. இப்போது ஆரம்பித்தால் தான் 2033 ல் முடிக்க முடியும். எனவே எல்லா வேலையும் ஆரம்பிக்க வேண்டியது தான் . கவலை வேண்டாம்,


venugopal s
ஜூலை 16, 2025 10:32

கர்நாடக அரசும் மத்திய அரசும் தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் போட்டுக் கொண்ட ஒரு ஒப்பந்தம் தமிழக அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால் வழக்கம் போல் மத்திய பாஜக அரசுக்கு குட்டு கிடைக்கும்!


Ganapathy
ஜூலை 16, 2025 11:06

2008ல யாரு மத்தியி்ல் ஆண்டானோ யாரு இப்ப கர்நாடகவை ஆளுகிறானோ எவன் தொளபதியோடு கூட்டணியில் உள்ளானோ... அவனை ஏன் கேட்கவில்லை இந்த கேள்வியை?


vivek
ஜூலை 16, 2025 11:25

முடிந்தால் போய் கேசு போடு


naranam
ஜூலை 16, 2025 09:40

2008 இல் கருணாநிதி தானே முதலமைச்சர்! மத்தியில் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் தானே இருந்தனர்? இவர்களென்ன தூங்கிக் கொண்டிருந்தனரா? 2008 இல் தமிழக அரசுக்குத் தெரியாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தினமலர் செய்தி வெளியிடுகிறது.. அப்போது திமுக அரசும் மத்திய திமுக மந்திரிகளும் என்ன செய்தனர்? ஊழலில் முழுகிக் கிடந்தனரோ? எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழியைப் போடுவது தான் விடியாத திமுகவின் வேலை..


ஆரூர் ரங்
ஜூலை 16, 2025 09:35

2008 இல் திமுக காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி தனியாரிடம் போட்ட பெங்களூரு விமான நிலைய ஒப்பந்தம் இப்போ இடைஞ்சலாக உள்ளது. இப்போதும் இரு மாநிலங்களிலும் அதே கூட்டணியாட்சி இருப்பதால் காவிரிப் பிரச்சினை போல ஆகும்.


முக்கிய வீடியோ