உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் அறிவிப்பு: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் அறிவிப்பு: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது!

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bwa56rim&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 17) ரூ. ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட பா.ஜ., தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழிசை கைது

இதற்கிடையே, சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பா.ஜ., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை கேள்வி

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?. இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கைது

பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

போராட்டம் தொடரும்

இது குறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாவது: தி.மு.க., அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பா.ஜ., சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை. டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதல்வர் ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

தாமரை மலர்கிறது
மார் 17, 2025 19:40

ஒட்டுமொத்த திமுக அமைச்சரவை உள்ளே போகவேண்டிய நேரம் வந்துவிட்டது.


Velan Iyengaar
மார் 17, 2025 16:55

அதிமுக்கியமான விஷயம் ஒன்று என்னவென்றால் அமுலாக்கத்துறையின் conviction rate அதாவது அவர்கள் பதியும் வழக்குகளில் அவர்கள் அடையும் வெற்றி விகிதம் என்ன தெரியுமா ?? அசிங்கமான 6% மட்டுமே வெறும் ஒரு நாள் பத்திரிகை செய்தியும் மக்கள் மத்தியில் ஒரு உண்மைக்கு மாறான அபிப்ராயத்தை சந்தேகத்தை விதைக்க முயலும் கேவலத்தை மட்டுமே செய்ய உதவுகிறது ....அது மட்டும் இல்லாமல் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் ஊழல் செய்ய உதவுகிறது ..... அப்பட்டமாக .... உச்சபட்ச மேலிருந்து கீழே வரை அந்த ஊழல் பணம் பாய்கிறது .....


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 17, 2025 17:12

ஏலே வேலா இங்கிருப்பவர்கள் எல்லாம் உன்னைப் போல் சமச்சீர் மாங்கா மடையர்கள் என்று நினைத்தாயா? அமலாக்க துறையின் வெற்றி 92% சதவீதம் வெறும் 6% சதவீதம் என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்காதே. உன்னோட பொய் பித்தலாட்ட சதவீத கணக்கை எல்லாம் அறிவாலய அடிமைகளான ஊபிஸ்களிடம் அளந்து விடு அவர்கள் வாயைப் பிளந்து கொண்டு கேட்பார்கள்.


Velan Iyengaar
மார் 17, 2025 20:21

வெள்ளைச்சாமி ... நான் ஆதாரம் காட்டுவேன் ... இங்க வெளியிடுவார்களா ?? உன்னால் ஆதாரம் காட்ட முடியுமா ??? சும்மா அடிச்சி விடுவதற்கு நான் ஒன்றும் கேனசங்கி இல்ல .....


Velan Iyengaar
மார் 17, 2025 20:23

மிக மிக சாதாரணமான இணையவெளி தேடல் வெள்ளைசாமியின் பொய்ய தோலுரித்து காட்டிவிடும் ..... இப்பவும் இப்படி அடித்துவிட துணியும் இந்த மாதிரி கேடுகெட்டவனுங்கள பார்த்தா பரிதாபமா இருக்கு ....


Gopalan
மார் 17, 2025 16:02

சும்மா போராட்டம் தேவையற்றது. பிரசிடென்ட் கண்காணிக்க வேண்டிய தருணம். அப்போது தான் ஊழல் முழுமையாக வெளி வரும். இவர்கள் தடயங்களை அழிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்


Asagh busagh
மார் 17, 2025 15:39

ஓவரா போராடினா் ரகசியமா காலில் விழுந்து கதறி பிழைப்பு நடத்துவோம். கட்டுமரத்தின் மானங்கெட்ட பரம்பரைன்னா சும்மாவா.


Velan Iyengaar
மார் 17, 2025 14:59

தேர்தல் பத்திர மெகா ஊழல் ஊழல் இல்லையாம் ..... அடப்பாவிகளா பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருந்துவிட்டது என்றாகிவிடுமா ??? ரெய்டுக்கு பின்னே தேர்தல் பத்திரம் ...ரெய்டுக்கு முன்னே தேர்தல் பத்திரம் ......டெண்டருக்கு முன்னே தேர்தல் பத்திரம் ... டெண்டருக்கு பின்னே தேர்தல் பத்திரம் ....தேதி வாரியாக நிரூபிக்கப்பட்டு மானம் கப்பல் ஏறியது உலகத்துக்கே தெரியும் .....


Arunkumar,Ramnad
மார் 17, 2025 17:15

அண்ணாமலை பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல கோடையிடியை கேட்ட நாகம் போல் நடுக்கம் வருதா வேலா அந்த பயம் இருக்கட்டும்.


Dharmavaan
மார் 17, 2025 17:44

வேலெனின் கொசுத்தொல்லை பிளிட் அடித்து ஒழிக்க வேண்டும்


M Ramachandran
மார் 17, 2025 14:24

ஸ்டாலினுக்கு அரசியலில் ஒரு கரும் புள்ளி. ஸ்டாலின் எந்த ஒரு கட்சிபோராட்டத்திலும் பெரியதாக கலந்து கொண்டதில்லை. பெயரளவிற்கு கைது இருக்கும் உடனேயே வெளியேற்றி விடுவார்கள். கருணாநிதியும் அப்படி தான். தீ மு கா தோன்றியதிலிருந்து தொண்டர்களால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் சிறையை செல்வார்கள். கருணாநிதி குடும்பம் பெயரை தட்டி சென்று விடும். எப்படி என்றால் டால்மியா புறம் பெயர் மாற்றத்திற்கு தலைய கொடுத்தான் தம்பி டில்லி செல்லும் GT எக்ஸ்பிரஸ் ஹிந்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தட்சிண் எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம் அப்போதை ரயில் அமைச்சர் மூக்குடைத்தார் இலங்கை தமிழர் விஷயத்தில் 1/2 நாள் நேரம் உண்ணா ணும் விரதம் போல் தான்


Venkataraman
மார் 17, 2025 14:20

சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து அமைச்சராக்கிய போதே தெரிந்து விட்டது சுடாலினும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று


Murthy
மார் 17, 2025 14:11

ஊழலுக்கு ஆதரவா போராடவேண்டும் என்று சொல்லுகிறார்களோ .....


Mr Krish Tamilnadu
மார் 17, 2025 13:49

மாறாத ஊழல். மன்னிப்பே இவர்களுக்கு மன்னிப்பு அளிக்காது. இந்த ஆட்சியில் மீண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, போதை பொருள் நடமாட்டம், துணிந்து நடந்தேறும் படுகொலைகள் மற்றும் தற்போது ஊழல். போன ஆட்சியின் வெள்ளை அறிக்கை தந்தார்கள். இவர்கள் என்ன செய்தார்கள். நிதியின் வெள்ளை அறிக்கை தர முடியுமா?.


sankaranarayanan
மார் 17, 2025 13:31

மதுபான கொள்கையினாலேயே ஓர் அரசாங்கம் சமீபத்தில் வீழ்ந்தது நினைவிருக்கா இனி அடுத்து வீழப்போவது திராவிட மாடல் அரசாகத்தான் இருக்கும் மதுவிருக்கும் இங்கே உள்ள ஆட்சியாளர்களுக்கும் அவ்வளவு தொடர்பு சமரசம் மதுவினாலேயே கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் கட்சியில் பலர் இருக்கின்றனர் அவர்களை மது சும்மா விடுமா ஆட்டிப்படைத்து ஆட்சியிலிருந்தே அவர்களை அகற்றிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை