உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11,508 வீடுகள், மனைகள் விற்க போராடும் வீ.வ.வாரியம்

11,508 வீடுகள், மனைகள் விற்க போராடும் வீ.வ.வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும், 11,508 வீடு, மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில், வீடு, மனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். இவற்றை பெற, பொதுமக்கள் மத்தியில் கடும்போட்டி நிலவும். அதேசமயம், வாரிய நிதியை பயன்படுத்தாமல், சுயநிதி முறையில் வீடுகள் கட்டத் துவங்கியதால், விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. வீடுகள், மனைகள் விற்காமல் முடங்குவது அதிகரித்துள்ளது. சுயநிதி முறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், 50 சதவீத மக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய வருகின்றனர். இதனால், எஞ்சிய வீடுகளுக்கான தொகையை வாரியம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில், வாரிய கோட்ட அலுவலக பணியாளர்களின் அலட்சியத்தால், மக்களிடையே வீடு, மனை வாங்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. வீட்டுவசதி வாரிய திட்டப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 10,000க்கும் மேற்பட்ட வீடு, மனைகள் விற்காமல் முடங்கி உள்ளன. இது, வாரியத்துக்கு நிர்வாக ரீதியாக நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்ட பகுதிகளில், 7,482 மனைகள், 4,026 வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதற்கான விற்பனை அறிவிப்புகளை வெளியிட, அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்த வீடு, மனைகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venkatesan murugesan
ஜூலை 13, 2024 00:56

திருமங்கலம் கோட்டம் கோயம்பேடு கோட்டம் இந்த இரண்டு கோட்டங்களில் நெற்குன்றம் மதுரைவாயில் பகுதிக்கு அருகில் TNHB வீடு 1Bhk வாங்க உதவி செய்யவும் நன்றி


Lohitha Varshini
ஜூலை 11, 2024 19:57

வேலூர் மாவட்டத்தில் கிடைக்குமா தெரிவிக்கவும் நன்றி


saranya sara
ஜூலை 11, 2024 18:50

வேறு மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாதாம் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது


saranya sara
ஜூலை 11, 2024 18:40

அதே மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதியாம் பலமுறை முயற்சி செய்து பயன் பெற முடியவில்லை.விதியில் மாற்றம் தேவை.


பூபாலன்
ஜூலை 10, 2024 22:44

நான் உங்களுக்கு வீடுகள் மனைகள் விற்க நான் உங்களுக்கு உதவுகின்றோன்


Rafiqi Ac
ஜூலை 10, 2024 10:34

வணக்கம் எம்பிரே சல்மா பானு குன்றத்தூர் நந்தம்பாக்கம் இருக்கு ரேன் எனக்கு நான் வசிக்கும் இடத்தில் ஒரு வீடு கவர்மெண்ட் அண்ட் கேட்டேன் அப்ளை பண்ணி அஞ்சு வருஷம் ஆயிடுச்சு இன்ன வரைக்கும் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல நான் ரெண்டு பெண் புள்ளியை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன் வருமானம் இல்ல எந்த ஒரு இடமும் இல்லை எதுவுமே இருக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வாடகைக்கு கொடுத்துட்டு இருக்கேன் வாடகை கொடுக்க முடியல நான் உங்கள் ஆண்டு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஹெல்ப் பண்ணுங்க உதவி பண்ணுங்க இப்படிக்கு ஐயா ஸ்டாலின் ??? ஹெல்ப் பண்ணுங்க


S MURALIDARAN
ஜூலை 09, 2024 23:58

கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டியது தானே.


Vellingiri C
ஜூலை 09, 2024 22:55

Veetu illatha etthanai kudumbankal tamilnadttil niraiya ullarkal .avarkalai thervu seyyuma?


Xavier
ஜூலை 09, 2024 22:50

I AM ATNEB RETIRED PENSIONER.I AM LIVING IN RENTAL HOUSE AT KIMBAKONAm near railway road.I request please consider me to allot one house at Trichy.My PPO.80051.


n senthilkumar
ஜூலை 09, 2024 18:46

நாங்க விற்று தர உதவளாமா 8248047730 டீடெயில்ஸ் ப்ளீஸ்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை