வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது பல்கா லஞ்சம் கொடுக்கும் பள்ளி நிர்வாகத்துக்குப் பொறுந்தாதுதானுங்களே ஆபீஸர்ஸ்?
மேலும் செய்திகள்
விதிமீறிய 140 கட்டடங்களுக்கு 'சீல்'
13-Aug-2025
சென்னை:தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில், 22 அடி அகல, 'சர்வீஸ்' சாலைக்கு இடம் ஒதுக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, தனியார் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாகவும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், பள்ளி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதில், சில இடங்களில் அனுமதியின்றி, பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.
நெடுஞ்சாலையில் இரு ந்து, பள்ளி வாகனங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும், உரிய வசதிகளுடன், 22 அடி அகலத்துக்கு, 'சர்வீஸ்' சாலைக்கு இடம் கொடுக்க வேண்டும். இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, எவ்வித தடையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். நெடுஞ்சாலையையு ம், சர்வீஸ் சாலையையும், பிரித்து காட்ட, தடுப்புகள் அமைக்க வேண்டும். இதேபோன்று, நீர் நிலைகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில், பள்ளி கட்டடங்கள் கட்டுவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. இத்தகைய நில உரிமையாளர்கள், நீர் நிலைகளை ஒட்டிய பக்கத்தில், முழு நீளத்துக்கு, எவ்வித திறப்பும் இன்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் கட்டட அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது பல்கா லஞ்சம் கொடுக்கும் பள்ளி நிர்வாகத்துக்குப் பொறுந்தாதுதானுங்களே ஆபீஸர்ஸ்?
13-Aug-2025