உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதிய மருந்துகள் இல்லாத நிலையில் விற்பனை மட்டும் எப்படி அதிகரிக்கும்! முதல்வர் மருந்தகங்கள் மீது புகார்

போதிய மருந்துகள் இல்லாத நிலையில் விற்பனை மட்டும் எப்படி அதிகரிக்கும்! முதல்வர் மருந்தகங்கள் மீது புகார்

உடுமலை: ''முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்துகள் இருப்பு இல்லாத நிலையில், விற்பனையை அதிகரிக்க துறை அலுவலர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது,'' என, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் நவநீதகிருஷ்ணன் பேசினார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை சின்னவீரம்பட்டியில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநில பொதுச்செயலர் நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:தமிழக அரசு சமீபத்தில் துவக்கிய, முதல்வர் மருந்தகங்களில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்படவில்லை. ஆனால், விற்பனையை அதிகரிக்க, துறை அலுவலர்களுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால், அலுவலர்கள் மனரீதியாக பாதிக்கின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.கூட்டுறவு துறையில் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் கலந்தாய்வு அடிப்படையில், மண்டல ஒதுக்கீடு வழங்குவதில்லை. இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக கலந்தாய்வு முறையை அரசு செயல்படுத்த வேண்டும்.அனைத்து மண்டலங்களிலும், இணை மற்றும் துணை பதிவாளர் வாயிலாக, மாலை, 5:00 மணிக்கு மேல் ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். கூட்டுறவுத்துறையில் பெண் பணியாளர்கள் அதிகம் உள்ள நிலையில், இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை