உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்ற வழக்கு உள்ள நபர் இயல்பாக நடமாடியது எப்படி? தமிழக அரசு மீது தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு

குற்ற வழக்கு உள்ள நபர் இயல்பாக நடமாடியது எப்படி? தமிழக அரசு மீது தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்' என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாணவி பற்றிய முழு விவரங்களுடன் எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம், பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களம் இறங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5x8purdg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை வந்த மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர், அண்ணா பல்கலையில் வெவ்வேறு துறைகளில் 7 மணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தினர். பல்கலை பேராசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர். கவர்னர் ரவியை, ராஜ் பவனில் சந்தித்த மகளிர் ஆணைய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்தனர். இந்நிலையில், இன்று (டிச.,31) டில்லி செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து விசாரித்தோம். கவர்னரிடமும் பேசியிருக்கிறோம். விசாரணை தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Seekayes
டிச 31, 2024 22:37

என்ன கேள்வி இது, கேனதனமா? நாங்க ஜாமினில் வந்த முன்னால் அமைச்சருக்கே மறுபடியும் பதவி கொடுத்தோம். இது எம்மாத்திரம். உச்ச நீதிமன்றம் இதை தட்டி கேட்டும், சைடுல ஒதுங்கி போயிட்டோம்.


சிட்டுக்குருவி
டிச 31, 2024 19:52

இவனுடைய வாட்ஸப் குரூப் அனைவரும் விசாரணை குழுவுக்குட்படுத்தப்படும் என்று நம்புகிரோம் .


Nandakumar Naidu.
டிச 31, 2024 19:41

இதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும்போதேலாம் சகஜமப்பா.


Sudha
டிச 31, 2024 19:37

அம்மணிகளே கேஸ் எப்போ முடிக்கணும் தண்டனை எப்போ tharanum னு கொஞ்சம் பார்த்துகிட்டே இருங்க. 2025 னு ஒரு 365 நாள் ஆரம்பம் ஆகுது. அதுக்குள்ள கேஸ் முடியலேன்னா நீங்க வேஸ்ட் அப்டின்னுன்னு முடிவுக்கு வருவோம்


Vijay
டிச 31, 2024 17:52

கஞ்சா சிண்டிகேட் பெண்கள் கற்பழிப்பு கோர்ட் வாசலில் கொலைகள் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் வழிப்பறி, திருட்டு கள்ள சாராய சாவுகள் மது போதையில் தள்ளாடும் தமிழகம் தண்ணீர் தொட்டியில் கழிவு கலப்பு மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஜால்ரா ஊடகங்கள் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் கைது தீவிரவாதிக்கு இறுதி ஊர்வலம் நமக்கென்ன சிறுபான்மையினர் என்ற போர்வையில், ஜாதி பெருமையில், அரசு ஊழியர்கள் என்ற சுயநலத்தில், பணத்திற்கு ஓட்டை விற்கும் அடிமைத்தனத்தில் மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போடுவோம். நாடு எக்கேடு கெட்டு போனால் என்ன?


duruvasar
டிச 31, 2024 17:40

திராவிட அடல் என்றால் ன்னவென்று கேட்பவர்களுக்கு இதுதானாடா திராவிட மாடல் இப்ப புரியுதா ?


அப்பாவி
டிச 31, 2024 16:53

கிராம நல்.பேக்.கிரவுண்டுடன் ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வராயிருக்காரே... என்ன ஏதுன்னு விசாரிங்க.


Constitutional Goons
டிச 31, 2024 16:10

எந்த கோர்ட்டு இவருக்கு தண்டனை கோபித்துள்ளது ? எந்த சிறையிலிருந்து தப்பித்து இங்கு திரிகிறார்? மகளிருக்கான என்ற போர்வையில் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதுதான் மகளிர் ஆணையத்தின் velaiyaa?


Constitutional Goons
டிச 31, 2024 16:07

இவர்கள் இப்போது இங்கு வருமுன் யார் யாரிடமெல்லாம் விசாரித்தார்கள்? . எந்தெந்த பத்திரிகையெல்லாம் படித்தார்கள் ? என்னென்ன காட்ஜி எழுதிவிபிக்கு இங்கு வந்தார்கள்?


Constitutional Goons
டிச 31, 2024 16:04

இயல்பாக நடமாடினார் என்று இவர்கள் பார்த்தார்கலா? செய்தித்தாள்களில் மோடியின் ஏஜெண்டுகள் அண்ணாமலை கூறியதை ஒப்பிக்கிறார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை