உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிக்கியது எப்படி?

சிக்கியது எப்படி?

ஜாபர் சாதிக்கை பிடித்தது குறித்து போலீசார் கூறியதாவது: ஜாபர் சாதிக், பிப்., 15ம் தேதி தன் கூட்டாளிகள் கைதான அன்றே தலைமறைவாகி விட்டார். ஆனால், தன் மொபைல் போனில் பயன்படுத்த எட்டு சிம்கார்டுகளை வாங்கி உள்ளார். ஒரு சிம்கார்டில் ஒரு முறை மட்டுமே பேசுவார். பின், அதை உடைத்து வீசி விடுவார். மொபைல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விடுவார். இதனால், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தோம். அவர்களை அழைத்த நபர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்தோம். அதில், ஒரு முறை மட்டுமே அழைக்கப்பட்ட எண்கள் இருந்தன. அந்த எண்களை தொடர்பு கொண்டால் உபயோகத்தில் இல்லை என, பதில் வந்தது. இது, எங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதேபோல, ஜாபர் சாதிக் வாங்கிய எட்டு சிம்கார்டுகளின் எண்களையும் சேகரித்து கண்காணித்தோம். அதில், ஒரு எண்ணில் இருந்து மட்டும், சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டது தெரியவந்தது. அந்த எண்ணின் மொபைல் போன் டவர் சிக்னலை வைத்து, ஜாபர் சாதிக்கை பிடித்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ