உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜினியின் வேட்டையன் படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்

ரஜினியின் வேட்டையன் படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - தசெ ஞானவேல்இசை - அனிருத்நடிப்பு - ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங்வெளியான தேதி - 10 அக்டோபர் 2024நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்ரேட்டிங் - 3.25/5ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. 'என்கவுன்டர், கார்ப்பரேட் மோசடி, மனித உரிமை, மனிதாபிமானம்' என கலந்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தசெ ஞானவேல். தனது முந்தைய படமான 'ஜெய் பீம்' படத்தில் காவல் துறை விசாரணை என்பது ஒரு அப்பாவியின் உயிரை எப்படி எடுக்கும் என்பதைக் காட்டியவர் இந்தப் படத்தில் 'போலி என்கவுன்டர்' என்பது ஒரு அப்பாவியின் உயிரை எப்படி பறிக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இந்திய அளவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டவர் ரஜினிகாந்த். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக இருக்கிறார். பள்ளியில் வைத்து கஞ்சா கடத்தல் செய்தவனை அரசுப்பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் புகாரில் என்கவுன்டர் செய்கிறார். அதன்பின் சென்னை மாற்றலாகி வரும் துஷாரா, இளைஞன் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகிறார். குற்றவாளி யார் என்பதை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் கிஷோர் கண்டுபிடிக்கத் தடுமாற, அவருக்குப் பதிலாக வரும் ரஜினிகாந்த், இரண்டே நாளில் அந்த குற்றவாளியை என்கவுன்டர் செய்கிறார். ஆனால், உண்மைக் குற்றவாளி அந்த இளைஞன் அல்ல என மனித உரிமை ஆணைய நீதிபதி அமிதாப்பச்சன் ரஜினியிடம் தெரிவிக்கிறார். தவறு செய்துவிட்ட குற்ற உணர்வில் உண்மைக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயல்கிறார். அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.அவசரமான நீதி தேவையில்லை, விரிவான நீதிதான் தேவை என்பதை உணர்த்தும் முழுக்க முழுக்க 'பொருளடக்கம்' சார்ந்த ஒரு படம். அதைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த சில காட்சிகளில் மட்டும் ஹீரோயிசத்தை வைத்துவிட்டு மற்ற காட்சிகளில் அவரை எஸ்.பி. அதியன் ஆக மட்டுமே பார்க்க வைத்திருக்கிறார்.

இப்படியான கதாபாத்திரங்கள் ரஜினிகாந்த்துக்குப் புதியதல்ல. முந்தைய 'ஜெயிலர்' படத்தில் ஓய்வு பெற்ற சிறை அதிகாரியாக நடித்திருந்தார், இந்தப் படத்தில் பணியில் இருக்கும் எஸ்.பி. ஆக நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் தோற்றம் ஒன்றுதான், ஆனாலும் நடிப்பில் மாற்றம் இருக்கிறது. என்கவுன்டைரை எப்போதும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு கதாபாத்திரம். தன்னால் ஒரு அப்பாவி உயிர் பறி போய்விட்டதே என்ற கவலையுடன் அதைச் சரி செய்ய நினைக்கிறார். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் இருக்கிறார். அதற்கு முன்பாக அந்த அப்பாவி ஒரு நிரபராதி என நிரூபிக்கப் போராடுகிறார். இன்னும் கொஞ்சம் ஹீரோயிசத்தை வைத்திருக்கலாமே என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.ரஜினிக்குப் பிறகு படத்தில் அதிகம் கவர்பவர் பஹத் பாசில். திருடனாக இருந்து திருந்தி, ரஜினிக்கு உதவும் சுவாரசியமான ஒரு 'டெக்கி' கதாபாத்திரம். அவ்வப்போது சில பல கமெண்ட்களை சொல்லி சிரிக்க வைக்கிறார். மனித உரிமை கமிஷனின் நீதிபதியாக அமிதாப்பச்சன். தமிழை உச்சரிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார் என்பது 'லிப் சின்க்'ல் தெரிகிறது. இருந்தாலும் அவருக்காகவே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரமாகத் தெரிகிறது. ஏழைப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பாடுபடும் ஆசிரியை கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன். அவருடைய எதிர்பாராத மரணம்தான் படத்தின் மையக் கரு. கொஞ்ச நேரமே வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர். 'மனசிலாயோ' பாடல், மற்றும் சில காட்சிகளுடன் வந்து போகிறார். ரஜினியின் விசாரணைக் குழுவின் போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங். துடிப்பான ஒரு கதாபாத்திரம். படத்தின் வில்லன் யார் என்பதின் சஸ்பென்ஸ் இடைவேளை வரை நீடிக்கிறது. மாணவர்களின் கல்வியில் கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளியாக ராணா டகுபட்டி. ஆரம்பத்தில் வரும் 'மனசிலாயோ' பாடலில் மட்டும் அனிருத்துக்குக் கொஞ்சம் வேலை. அதன்பின் வரும் காட்சிகளில் அவருடைய இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காட்சிகள் அதிரடியாக இல்லாமல் உணர்வுபூர்வமாக இருந்ததால் இசையை 'பிளாட்' ஆகக் கொடுத்துவிட்டார். 'ஜெயிலர்' படத்தில் அதிரடி காட்டியிருந்தார், இதில் கொஞ்சம் ஏமாற்றமே. ஒளிப்பதிவாளர் கதிர், படத்தின் 'கன்டென்ட்'டுக்குள் தன்னுடைய 'கேமரா'வை அடக்கியுள்ளார். சில காட்சிகளில் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டுள்ளார் இயக்குனர். குறிப்பாக பஹத் பாசில் கதாபாத்திரம் நினைத்தபடி எல்லா இடத்திலும் செல்வதும், அவரை யாருக்குமே தெரியாதவர் போல காட்டுவது சினிமாத்தனமாக உள்ளது. இடைவேளைக்குப் பிறகான வில்லனை நோக்கிய விசாரணைத் தேடல் விறுவிறுப்பு குறைவாகத் தெரிகிறது. படத்தில் ஒரு வேகம் இல்லாமல் மெதுவாக நகர்வதையும் தவிர்த்திருக்கலாம்.

வேட்டையன் - இரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Nandakumar Naidu.
அக் 16, 2024 19:09

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதெல்லாம் பழைய கதை. இப்பொழுது எல்லாம் எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் தான் அதிகம். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்று இன்று சட்டத்தை மாற்ற வேண்டும். மேலும் ஞானவேல் தேசத்திற்கு கலந்து ஏற்படுத்த வேண்டும் என்று தோரணையில் படத்தை எடுத்துள்ளார். இவாஞ்சலிஸ்ட்கள் வந்து தான் இந்தியாவில் கல்வி கற்பித்தார்கள் என்ற எந்த வயதில் படத்தை இயக்கி உள்ளார். 5000 வருடங்களுக்கு முன்பே நம் நாட்டில் பல்கலைக்கழகங்களில் இருந்து உள்ளன, கல்வியில் நாம் உலகத்துக்கே முன்னோடியாக இருந்திருக்கும் என்பதை மறந்து விட்டார் இவர். வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இவ்வாறு படம் எடுத்திருக்கிறார். ரஜினியின் அறியாமல் நடித்துள்ளார். மோசமான படம்.


nagarazza razza
அக் 13, 2024 22:21

வழக்கமாக படம் வரும் நேரத்தில் அரசியல் பேசி படத்தை ஓட வைக்க பார்ப்பார் ரஜினி. அந்த ஐடியா காலாவதி ஆகிவிட்டதால் இம்முறை மருத்துவமனை / சிகிச்சை என்னும் ஐடியாவை கையில் எடுத்து இருக்கிறார்


shreya
அக் 12, 2024 21:59

என்னைக்குதான் ஞானவேல் ஞானத்தோட படம் எடுக்க போறாரோ? நீட் எக்ஸாம் னால செருப்பு தைக்கிற தொழிலாளி யின் மகனிலிருரந்து அடித்தட்டு மக்களின் பசங்க வரை டாக்டர் படிப்பு படிக்க முடியுது. அந்த நிஜத்தை மாத்தி கார்பொரேட் கம்பெனி ரெட் ஜெய்ன்ட் க்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி எடுத்துருக்கறது ஒரு சாதனையா? கார்பரெட் னா அம்பானி அதானி மட்டும்தான் சொல்றனுங்க. காசுக்கு விலை போன பொய்யயை நிஜமாக சித்தரிக்கும் ஒரு தி மு க கொத்தடிமை


who is tamilarkal
அக் 13, 2024 19:59

கிறுக்கு பு மாதிரி பேசாத நீட் தேர்வுனால எந்த ஏழை பயன் அடைச்சிருக்க அறிய வகை 8% ஏழையா


who is tamilarkal
அக் 13, 2024 19:59

கிறுக்கு மாதிரி பேசாத நீட் தேர்வுனால எந்த ஏழை பயன் அடைச்சிருக்க அறிய வகை 8% ஏழையா


Rajagopal Varatharaj
அக் 12, 2024 11:31

சிவாஜி க்கப்புரம், சமுதாய பிரச்சினையை மையப்படுத்திய படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் இன்னமும் ஆழமாகவும், உணர்வு பூர்வமாகவும் அலசியிருக்கும் ஞானவேலை கட்டி பிடித்து வாழ்த்தனும். இவ்ளோ சீரியஷான சிந்தனையை ரஜினியிசம் குறையாமல் எப்படி கொடுக்க முடிந்தது? நடிகர்கள் தேர்வு அற்புதம் குறிப்பாக ஹார்லிக்ஸ் பகத்பாசில்.. தலைவருக்கு இணையாக கைதட்டல் பெறுகிறார். குறை என்று தேடினால், ரஜினி தனி ஒருவராக வில்லன்கள் கோட்டைக்குள்ளேயே போய் துவம்சம் செய்வதுதான். இதை நெல்சன் சாமர்த்தியமாக கையாண்டார். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" எனும்படி லட்சங்களில் கடன்பட்டு தன் பிள்ளைகளை படிக்க வைக்கும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள் அவமானங்கள் வேதனைகளை வேர் வரை சென்று அலசியிருக்கும் "" வேட்டையனு"க்கு நன்றி சொல்வோம். வேட்டையன்? வேற மாதிரி அனுபவம். சூப்பர் ஸ்டாரு கண்ணா.. சும்மா ச்சூடு கண்ணா 4.3/5 வ.ராசகோபாலன்


Vijay D Ratnam
அக் 10, 2024 23:20

எப்புட்றா, செகண்ட் ஹாஃப் உட்கார முடியலடா சாமி.


நசி
அக் 10, 2024 20:22

தமிழனை வைதது காசு பார்க்கும் இந்த கோலிவுட்ல் இந்த படத்தில் எத்தனை தமிழர்கள்‌ நடித்துள்ளார்கள்‌?? குறுகிய‌கண்ணோட்டம் அல்ல. யதார்த்தம்‌ எல்லாவற்றிலும் காசு பார்க்கனும்‌ என்ற‌ எண்ணம் தான்


skv srinivasankrishnaveni
அக் 10, 2024 19:51

ஒரு கற்பழிப்பு நடந்துட்டு கொலையும் எயறானுகளே பாவிகள் அவளெண்ண்ட பாவம் செயதாள வரவர செய்தித்தாள் தொறந்தாலே அசிங்கம் இந்த செய்திகளேதான் உலா வரது கற்பழிச்சால் கட்டாயம் அந்த வேரிநாய்களை சுட்டுக்கொல்லவேண்டும்


தாமரை மலர்கிறது
அக் 10, 2024 18:51

இந்த படம் ஓடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 17:36

எனக்கு அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போகுது ...... நான் உசுரோட இருந்து நடிக்கிறவரைக்கும் எனது ரசிகர்கள் என் படத்தை வெற்றிகரமா ஓட்ட பெரிய மனசு பண்ணனும் ....


Sree
அக் 10, 2024 17:26

Why do you want to tell the entire story? Are doing this for other movies?


புதிய வீடியோ