உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 108 அவசர சேவை மையம் எப்படி செயல்படுகிறது? சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முதல்வர் விஜய் திடீர் விசிட்

108 அவசர சேவை மையம் எப்படி செயல்படுகிறது? சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முதல்வர் விஜய் திடீர் விசிட்

சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில டிஎம்எஸ் எனப்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்திற்கு முதல்வர் விஜய் இன்று (நவ.17) நேரில் சென்றார். அங்கு ஆய்வு பணிகயை மேற்கொண்டார்.அங்கு செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்தார். சேவை மையத்தின் அதிகாரிகள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் முதல்வர் விஜய்யிடம் அங்கு நடைபெறும் பணிகளை விளக்கிக் கூறினர். 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக தமிழகம் முழுவதும் 1558 வாகனங்கள் இயங்கி வருகின்றன. சேவை மையத்தில் அழைப்பு வந்தால் 6 நிமிடங்கள் 45 விநாடிகளுக்குள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை