உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் எத்தனை முறை வருவாரோ பிரதமர் மோடி?

இன்னும் எத்தனை முறை வருவாரோ பிரதமர் மோடி?

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி, 'ஜெய்க்கா' என்ற, ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் துணை தலைவரை சந்தித்து பேசினேன். அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி, ஐந்து ஆண்டுகளாக துவக்கப்படாமல் உள்ளது. பணிகளை விரைந்து துவக்கி முடிக்க வேண்டுகோள் விடுத்தேன். அவரோ, 2024 இறுதிக்குள் பணிகள் துவங்கப்பட்டு, 2028க்கும் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது பூமி பூஜை நடந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்டுமான பணி துவங்கி நடப்பதை, மக்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். பிரதமர் மோடி தேர்தலுக்கு முன், 10 நாட்களில் இரண்டு முறை வந்து சென்றுள்ளார். தி.மு.க., அரசு சென்னைக்கு எதுவும் செய்யவில்லை என்பதை சுற்றி பார்த்து விட்டு, அவர் குறை கூறட்டும்.மத்திய அரசின் எந்த மாதிரியான திட்டங்களை, தி.மு.க., எதிர்க்கிறது என்பதை, பிரதமரை தெளிவுப்படுத்த சொல்லுங்கள். எந்த திட்டம் என்று சொன்னால் தான், பதில் கூற முடியும். பொதுவாக கூறுவது உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. பிரதமருக்கு அச்சம் இருப்பதால் தான், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வருகிறார்; இன்னும் எத்தனை முறை வருவார் என்பது தெரியாது.வெள்ள மேலாண்மை செயல்பட்டதா, இல்லையா என்பதை, அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குடிசை பகுதிகளில், பிரதமர் மோடியை நேரடியாக வந்து கேட்க சொல்லுங்கள். அதற்கான பதிலை அப்பகுதி மக்களே தருவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ