உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், வருவாய் எவ்வளவு? விபரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், வருவாய் எவ்வளவு? விபரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் விபரங்களை அறிக்கையாக, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழக தலைமை செயலர், அனைத்து துறை தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வழிகாட்டுதல், விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என, 2021ல் உத்தரவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uxy9m3wz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, தலைமை செயலர் தலைமையில் 2021ல் கூட்டம் நடந்தது. அனைத்து துறை அதிகாரிகளும் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தலைமை செயலர் உத்தரவிட்டார். அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அதன் பிறகு கூட்டம் நடக்கவில்லை. இதனால் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில், மறு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதற்குரிய புள்ளிவிபர அறிக்கையை அரசுக்கு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர், கோவில் இணை கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர், 'அறிக்கையில் எந்த தகவலும் இல்லை. கோவில் சொத்துக்களுக்குரிய ஆவணங்களை சரியாக பராமரிப்பதில்லை. அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டது. அதற்குரிய வாடகை, 20 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை. புது கட்டடத்திற்கு வாடகையை நிர்ணயிக்கவில்லை. இது தணிக்கை அறிக்கையில் உள்ளது' என்றார். அரசு தரப்பு, 'எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளது என மனுதாரர் தெளிவுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மேம்போக்காக உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன, அதன் உப கோவில்களின் விபரம், அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? வருவாய் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது; சொத்துக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா; இருக்கும் பட்சத்தில் அகற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; சொத்துக்களின் விபரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சரியாக உள்ளனவா என்பது குறித்து, அறநிலையத்துறை தரப்பில் அக்., 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani D
செப் 06, 2025 20:16

முதலில் இந்து கோயில்களில் பணிபுரியும் மாற்றுமதத்தினரை +நாத்திகர்களை வெளியேற்றிவிடடு ஆன்மீகப்பற்றுள்ள இந்துக்களை கோயில்களில் பணிக்கு அமர்த்துங்கள்.


venkatramani subramaniam
செப் 06, 2025 13:21

It is not the work of the petitioner to identify the encroachments. The court should form a special team to do this work. How to verify the data given by HRCE.Most of the temple land records have not been properly documented in TN.


KRISHNAN R
செப் 06, 2025 08:32

எந்த கோவில் விவரமும் சரியா கிடைக்காது.. யுவர் ஆனர்


G Mahalingam
செப் 05, 2025 19:39

அப்படி அறிக்கை கொடுத்தாலும் மீண்டும் அது உண்மையா என்று மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். திமுக என்றாலே பொய் பித்தலாட்டம் கட்சி.


Barakat Ali
செப் 05, 2025 13:29

ஏன் ஹிந்து தெய்வங்கள் இத்தனை இருந்தும் கோவில் சொத்துக்களை சுரண்டி உண்ணும் பெருச்சாளிகளை கண்டுகொள்வதில்லை ????


Artist
செப் 05, 2025 17:38

புனித பயணத்துக்கு சென்றவர்கள் போன வருஷம் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கானோர் சுருண்டு விழுந்து இறந்தபோதும் கடவுள் கண்டுக்கலியே ..இந்த மாதிரி விஷயங்களில் எல்லா கடவுள்களும் செக்குலர் தான்


தத்வமசி
செப் 05, 2025 11:49

நாலு ஐந்து பேர் அமர்ந்து இப்பொது இடது வலது கைகளால் கணக்கை எழுதி தயாராக வைப்பார்கள் பாருங்கள் அங்கே தான் நிற்கிறது திராவிடம்.


M Ramachandran
செப் 05, 2025 11:49

என்றாய்க்கு மஞ்ச துண்டு ஓங்கோல் திருடன் பதவிக்கு வந்ததோ அன்று பிடித்தது கேடு கோயில் சொத்துகளுக்கு. இது வரை சுரண்டப்பட்ட மதிப்பு 10000 கோடி அல்லது உலகளவில் மதிப்பு விடியலின் சொல்படி குறைந்தது ஒரு த்ரில்லியன் டாலர் மதிப்பு. இதில் அந்த ஆள் உண்மை விளம்பி. அடித்த சொத்தை வைத்து முழு ஆந்திராவிற்கும் 5 ஆண்டுகள் வரி விதிக்காமல் ஓங்கோல் உட்பட ஆந்திரா மக்களுக்கு நல திட்டஙகள் நீர் பாசனம் கல்வி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல் முதலியன பட்ஜெட் என்ற பெயரில்வரி விதிக்காமல் செய்யமுடியும். அந்த திட்டத்துடன் தான் விடியல் அப்பா அப்பாவின் அப்பா அப்பப்பா தமிழ்நாட்டை ஆடுகளமாக்கி முன்னோட்டம் பார்த்திருக்கிறார்கள். இன்னும் கூன்ஜி குழுவான் பாக்கி இருக்கு சுரண்ட.


SUNDARASIVAM S
செப் 05, 2025 11:10

தேர்தல் வருகிறது, செலவுக்கு பணம்வேணும், யார் கிட்டையும் எதுவும் முடியாது, அப்புறம் இப்ப நடக்கிற தேர்தல் எத்தனை நாளைக்கோ,, அல்லது எத்தனை nimishaththukko?/


BALAJI
செப் 05, 2025 09:58

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடம் நயினார் மகன் பாலாஜிக்கு மாறியது எப்படினு விசாரிக்கணும்


Nachiar
செப் 05, 2025 09:43

மீனாட்சி அம்மன் கோவிலா ? புனித அன்டோனியார் அன்னை வேளாங்கண்ணி என எழுதும் பொழுது அதே மரியாதையை இந்து கடவுளர்க்கும் கொடுக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை