உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹூப்ளி-கோட்டயம் சபரிமலை சிறப்பு ரயில்

ஹூப்ளி-கோட்டயம் சபரிமலை சிறப்பு ரயில்

விருதுநகர்; சபரிமலை பக்தர்களுக்காக ஹூப்ளி - -கோட்டயம் இடையே நவ. 19 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதையொட்டி கர்நாடகாமாநிலம் ஹூப்ளியில் இருந்து (07371) சிறப்பு ரயில் நவ.19 முதல் 2025 ஜன. 14 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (07372) நவ.20 முதல் 2025 ஜன.15 வரை செல்கிறது.இந்த ரயில் 18 பெட்டிகளுடன் ஹூப்ளியில்இருந்து மதியம் 3:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:00 மணிக்கு கோட்டயம் வந்தடையும். மறுமார்க்கத்தில் புதன்கிழமைகளில் மதியம் 3:00 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:50 மணிக்கு ஹூப்ளிக்கு செல்லும்.ஹாவேரி, ராணிபென்னுார், ஹரிஹர், தாவங்கரே, பீரூர், அரசிகெரே, துமகூரு, சிக்கபானவர், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ