உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவியை கொன்று போலீசில் கணவர் சரண்

மனைவியை கொன்று போலீசில் கணவர் சரண்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம், 67. இவரது மகள் இந்திராணி, 37. இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி தவபாலன், 12, என்ற மகன் உள்ளார்.கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தந்தையுடன் வசித்து வந்தார். இவர், ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த முருகன், 40, என்பவரோடு இரு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக, இந்திராணிக்கு திருமணம் நடந்தது. முருகன் எம்.ராசிமங்கலத்தில் மனைவியோடு தங்கிஉள்ளார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.நேற்று மாலை தகராறு ஏற்பட்ட போது, முருகன் வீட்டில் இருந்த அரிவாளால், இந்திராணியை சரமாரியாக தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்.அப்போது, தடுக்க சென்ற இந்திராணியின் தாய் லட்சுமி, 60, என்பவரையும் வெட்டியுள்ளார். இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முருகன் ஆலங்குடி போலீசில் சரணடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை