உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கப்பூரில் இருந்து கடத்தல்; கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா!

சிங்கப்பூரில் இருந்து கடத்தல்; கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார் 6.7 கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a8ebelo8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா என்ற உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க மற்றும் வான் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். பலகட்ட சோதனைகளுக்கு பிறகு, இருவரும் 6.7 கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா என்ற உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பஹத் மோன் முஜீப், கஹைல் வாழமத்தில் உபைதுல்லா என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த வேறு 2 பயணிகளையும் சுங்கத்துறையினர் கடும் சோதனைக்கு ஆட்படுத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரிமோட் கண்ட்ரோலுடன் இயங்கும் உயர்ரக ட்ரோன்கள் மற்றும் அதனை இயக்குவதற்கு தேவையான சாதனங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 18.67 லட்சம் ஆகும்.தொடர் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டிதுரை சுப்பையா என்பது தெரிய வந்தது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படும் ஒரு வகையான கஞ்சா செடியாகும். இது மண் இல்லாமல் நீர் கரைசல்கள் மூலம் வளர்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த கஞ்சாவை நூதன முறையில் இந்தியாவுக்கு கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஆக 12, 2025 16:26

சிங்கப்பூரில் ஏதுடா இவ்ளோ கஞ்சா? ஓஹோ பாலிசி மாறிடிச்சோ?


Kasimani Baskaran
ஆக 12, 2025 15:47

எந்தக்கொம்பனாக இருந்தாலும் சிங்கப்பூரில் 500 கிராமூக்கு மேல் கஞ்சா வைத்திருந்தால் நிச்சயம் மரண தண்டனைதான். யாருக்கும் விதிவிலக்குகள் கிடையாது. ஆகவே பிடிபட்ட கடத்தல்க்காரன் வேறு நாட்டில் இருந்து, சிங்கப்பூரில் இறங்கி, கோவைக்கு செண்டிருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. பயணிகளின் சுமைகளை நேரடியாக சுங்கம் மற்றும் குடியேற்ற சோதனைகளுக்கு உட்படுத்தாமல் நேரடியாக சென்றிருக்க வேண்டும். மோப்ப நாய்கள் அதிகம் - எளிதில் சிக்கி விடுவார்கள்.


Mani . V
ஆக 12, 2025 14:13

யோவ் அப்பா குடும்பத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைய்யா. சொன்னா நம்புய்யா.


Natarajan Ramanathan
ஆக 12, 2025 11:54

இந்தமாதிரி போதைமருந்து கடத்தல் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஒரு கையை வெட்டி எடுத்துவிட்டால் மீண்டும் இதுபோல செய்யமாட்டார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 12, 2025 10:26

மிக கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள சிங்கப்பூரிலிருந்து இது எப்படி கடத்தப்பட்டது? அந்த நாட்டிற்குள் இது எவ்வாறு வந்தது? இதை கவனிக்கத்தவரிய சிங்கப்பூர் அரசுக்கு இந்த நிகழ்வு ஒரு பெரிய அவமானம். கண்டுபிடித்த நம் சுங்கத்துறையினருக்கு வாழ்த்துக்கள். கடத்தியது என்னவோ வழக்கம்போல எல்லோருக்கும் தெரிந்த, அமைதியான, மர்ம மனிதர்கள்தான். அடாது மழை பெய்தாலும் விடாது முயற்சிக்கும் அவர்களின் சட்டவிரோத செயலுக்கு ஒரு சல்யூட். திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டு இருக்கும், அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.


Dv Nanru
ஆக 12, 2025 08:54

அவ்வளவு தண்டனைகள் சிங்கப்பூரில் கடுமையாக இருந்தும் இது போன்ற கஞ்சா கடத்தலில் எப்படி ஈடுபடுகிறார்கள் இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் ...


முக்கிய வீடியோ