உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் தன் விருப்பத்தை வெளியிட்ட திருமா

எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் தன் விருப்பத்தை வெளியிட்ட திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆயக்குடி : ''எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு''என, திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும். எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி வேகமாக பயணப்படுவோம். தமிழகத்தில் கட்சி துவங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்கிறோம். மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் வி.சி.,க்கள் கொடி பறக்கிறது. மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உருவாகி உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, கட்சி நிர்வாகிகளுடன் ரோப் கார் வழியாக பழனி கோவிலுக்குச் சென்று முருகனை தரிசித்தார் திருமாவளவன். கோவிலுக்குள் அவரை தேவஸ்தான அதிகாரிகளும், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் வரவேற்று பிரசாதங்களை வழங்கினர்.தொடர்ச்சியாக, படிப்பாதை வழியாக பழனி மலையடிவாரம் வந்து, அங்கு புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று, அங்கிருக்கும் தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவ சமாதியை வணங்கினார். பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனுக்கு ஸ்படிக மாலை அணிவித்து, போகர் படம் வழங்கினார். தரிசனம் முடிந்து புலிப்பாணி ஆசிரமத்துக்கு வெளியே வந்த திருமாவளவனிடம், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது; அரசிடம் சொல்லி, எங்களுக்கு உதவ வேண்டும் என, மலையடிவார நடைப்பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்டுக் கொண்ட திருமாவளவன், ''முதல்வரிடம் பேசி உதவுகிறேன்' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

கும்பகோணத்து குசும்பன்
நவ 28, 2024 08:11

இரண்டு சீட்டுக்கும் ஆப்பு வைச்சாச்சு


Indian
நவ 26, 2024 14:11

எனக்கும் தான் உண்டு .


M Ramachandran
நவ 26, 2024 10:13

சொர்ன கெட்ட ஜென்மஙகள். அதைய்ய விட இவன்ங்களுக்கு போடும் ஒட்டு பிச்சையய்க்காரனுக்கு போடுவதை விட மகா கேவலம். யுய்வஙஹஹ் சொந்த சமூகத்திர்ற்கும் உருப்படியா ஒன்றும் செய்வதில்லை. சார்ந்த தொகுதி மக்களுக்கும் ஒன்றும் செய்யவதில்லை. விஜய்க்கு போடும் ஓட்டும் தண்டம். முன் அனுபவ மில்லா அவர் பெயரில் எவனாவது வந்து நுழைந்து நாட்டாண்மை செய்ய போகிறான்


M Ramachandran
நவ 24, 2024 19:45

திருட்டு வேலை செய்யும் திரு மாவு. ஸநாதநாதை எதிர்ப்பது போல் பாவலா காட்டி விட்டு இப்போ சாமியார் வேஷம் போடும் இந்த ஆளை எதில் சேர்ப்பது. ஸ்திரமில்லா மனசு தாவக்கூடியது. தி மு கா வுடன் தன்மானமிழந்தும் தன வெற்றிக்காக அவர்களிடம் கையேந்தி நிற்பது.


Minimole P C
நவ 24, 2024 07:40

Thiruma need not be given importance in news. He is man of double, trible standard. Shameless guy.


sankar
நவ 23, 2024 14:49

தேர்தல் வரும்போது சிவனின் நினைவும் பின்னர் சிலைகள் நினைவும் வரும் - செலக்டிவ் அம்னீசியா.


Amjath
நவ 22, 2024 22:33

கனவு கண்டு கொண்டே இரு...


theruvasagan
நவ 22, 2024 21:59

தெனாவட்டு பேசினவனையெல்லாம் தன் காலடியில் விழச் செய்வான் பழனியாண்டி.


theruvasagan
நவ 22, 2024 21:53

பகுத்தறிவு நாத்திகம் என்று வெளியில் பேசுபவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்றால் பழனிக்கே அலகு குத்தி பால்காவடி எடுப்பார்கள் என்று அன்று சோ சொன்னதில் இருக்கும் தீர்க்க தரிசனத்தை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.


வாசகர்
நவ 22, 2024 17:38

திருமாவளவன் அவர்களே நீங்கள் கூறியது, உயரமா கூம்பு வடிவில் இருந்தால் சர்ச். உயரமா வட்டமா இருந்தால் அது மசூதி‌ உயரமா அசிங்கமான பொம்மை இருந்தால் அது கோயில் ன்னு சொல்லிட்டு , இப்போது அந்த அசிங்கமான பொம்மை இருக்குற கோயிலுக்கு எதுக்கு போனீங்க? யாரை ஏமாத்தரீங்க?


1968shylaja kumari
நவ 22, 2024 22:27

இதுக்குதான் அந்தக்காலத்தில் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையா ?


சமீபத்திய செய்தி