உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நானே பா.ம.க., தலைவர்: மகனது தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ்

நானே பா.ம.க., தலைவர்: மகனது தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ்

விழுப்புரம்: ''பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன். பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்'' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.பா.ம.க., கட்சியின் தலைவராக அன்புமணி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்து கொண்டார். இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=un4nrofb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தலின் வெற்றிக்காக, அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். பா.ம.க.,கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. பதவி பெறும் ஆசை எனக்கில்லை. தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் 28ல்!

மேடையிலேயே வார்த்தை போர் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக மேடையிலேயே வார்த்தை போர் வெடித்தது. இது அரசியல் களத்தில் பேசும் பொருளானது. மறுநாள், தைலாபுரம் தோட்டத்தில் தந்தையுடன் அன்புமணி சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு தவறு

இது குறித்து பா.ம.க., பொருளாளர் திலகபமா வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க.,வின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அவரின் அன்பினை ருசித்தவள் நான் . ஆனால் இந்த முடிவு தவறு. 'அன்புதானே எல்லாம்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

SIVA
ஏப் 10, 2025 21:36

இவர் கட்சி துவங்கிய போது எங்கள் குடும்பத்தில் யாரும் பதவிக்கு வர மாட்டோம் அப்படி வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றார் , இப்போது பெற்ற மகனை கூட நம்ப மறுக்கின்றார் , கட்டுமரம் கனிமொழி அவர்கள் பிறந்த போது அது அவர் மகள் என்று கட்டுரை எழுதியதற்காக ஒரு நிருபரை கைது செய்தார் , அதே கனிமொழிக்காக 2 ஜி கேஸில் அரசியல் ரீதியாக நிறைய சமரசம் செய்தார் அழகிரிக்காக கலாநிதி மாறன் , தயாநிதி மாறன் அவர்களை தூரோகி என்றார் , ஸ்டாலினுக்காக அழகிரியை கொலைகாரன் என்றார் , இது தான் அரசியல்வியாதிகளின் குணம் .....


ganeshbabu
ஏப் 10, 2025 20:04

போட்ட ட்ராமா பத்தாதா இன்னும் ஒரு ட்ராமா போடணுமா , இது எதுக்குன்னு நாளைக்கு தெரியும். மக பையன நியமிக்கும் போது எவனும் கேக்க கூடாதுன்னு ஒரு ட்ராமா போட்டானுக. இப்போ எதுக்கு புது ட்ராம்மான்னு நாளைக்கு தெரியும்


K.Ramakrishnan
ஏப் 10, 2025 19:46

சரிங்க... இனி அறிக்கை அப்பா மட்டும் தானா.. மகனும் விடுவாரா? கொசுத் தொல்லை தாங்க முடியல... பதவி ஆசை இல்லையாம்...என்று சொல்லிக்கொண்டே தலைவர் பதவியை தானே பறித்துக்கொண்டதற்கு என்ன பெயர்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 10, 2025 19:43

ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அவரின் அன்பினை ருசித்தவர் நான் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 10, 2025 19:56

பா.ம.க., பொருளாளர் திலகபமா ......


தாமரை மலர்கிறது
ஏப் 10, 2025 19:11

குடும்ப சண்டையால் ஒரு எதிர்க்கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. பாமக ஒரு சாதிக்கட்சி என்றாலும், தற்போது பிஜேபி உடன் கூட்டணியில் உள்ளது. ராமதாஸின் இது போன்ற செயல்கள், ஸ்டாலினுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 01:10

பாஜாக்காவை தூக்க ஆள் குறையுதேன்னு உனக்கு கவல..


Sivakumar
ஏப் 11, 2025 06:14

ஓ பிஜேபி கூட கூட்டணியில் இருந்தால் ஜாதி காட்சியானாலும் பிரச்சனையில்லை, வாரிசு அரசியல் ஆனாலும் பிரச்சனையில்லை, ஊழல் பண்ணினாலும் raid வராது. இதைவிட பெரிய ஊழல் வேற என்ன இருக்க முடியும் ?


NACHI
ஏப் 10, 2025 18:53

2026 –ல் கட்சிக்கு ..... ரெடி.


M Kannan
ஏப் 10, 2025 17:33

ஜாதி கட்சி நாராயணன் என்ன செய்தாளும் அந்த ஜாதி ஓட்டே கிடய்க்காது.


Kanns
ஏப் 10, 2025 17:11

Strictly Ban All Casteist Parties PMK VCK etc etc Operating/Cheating Without Caste-Names But Dividing Society by Working Only for their Castes


தஞ்சை மன்னர்
ஏப் 10, 2025 16:25

நாங்களே ராஜா நாங்களே மந்திரி எங்களுக்கு கூஜா தூக்க ஆள் இல்லை இப்படிக்கு மாங்கா கட்சிக்கு கூஜா துக்கும் தூக்கு வாளிகளா க சில அல்லக்கைகள்


தஞ்சை மன்னர்
ஏப் 10, 2025 16:23

இவிங்க வேற கூட கூட காமெடி பண்ணிக்கிட்டு இந்த பா மா காவை ஆர் ஸ் ஸ் கும்பல் கபளீரம் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது அது தெரியாமல் இருவரும் ஜோக் அடித்து விளையாடி கொண்டு இருக்கின்றனர் அன்பு மணி மற்றும் ராமதாசும் சேர்ந்து கொண்டு அந்த கட்சியை ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு தாரை வார்த்து ரொம்ப நாள் ஆட்சி இவர்களை நம்பி பணம் கொடுக்கும் பி சே பி ஹி ஹி கோவிந்த கோவிந்த தான்


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 20:01

இந்த நபர் முடி சூடா மன்னனா அல்லது முடி சூடிய கோமாளியா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை