மேலும் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் சறுக்குமா... சாதிக்குமா?
29-Oct-2024
நான் பொறுப்புக்காக, பா.ஜ.,வில் இணையவில்லை. விஜய் அரசிலுயக்கு வந்தது வரவேற்கத்தக்கது. அவரின் கொள்கை என்ன; மற்ற கட்சிகளை விட வேறு மாதிரி என்ன செயல்படுத்த போகிறார்; என்ன திட்டங்களை வைத்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்குவோர், மற்ற கட்சிகளை தாக்கினால் தான் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மக்கள் பிரச்னையை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும்.விஜயை போல் உச்ச நடிகராக இருந்தபோது, அதிக வெற்றி படங்களை கொடுத்த நிலையில்தான் நானும் அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தேன். தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியால், உலகளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்துள்ளது. - நடிகர் சரத்குமார், தமிழக பா.ஜ.,
29-Oct-2024