உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வரிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: முத்தரசன்

 முதல்வரிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: முத்தரசன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

பின்னர் வீரபாண்டியன் அளித்த பேட்டி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்குமாறு, முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம். மேலும், இந்திய சோவியத் கலாசார கழகத்தின், அகில இந்திய மாநாடு, சென்னையில் நடக்க உள்ளது. அதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அந்த மாநாட்டிற்கும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தோம். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பற்றி பரிசீலிப்பதாக, முதல்வர் கூறினார். கூட்டணி பேச குழு அமைப்பது குறித்து, முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். முத்தரசன் கூறுகையில், ''அறிவாலயம் வந்தாலே, கூட்டணி பேச்சுக்காகத்தான் வருவோம் என்று இல்லை. மக்கள் சார்ந்த கோரிக்கைக்காகவும், கட்சி நிகழ்ச்சி அழைப்புக்காகவும் வருவோம். இந்த சந்திப்பில், கூட்டணி சம்பந்தமாக, பேச்சு எதுவும் நடத்தவில்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
டிச 12, 2025 11:13

ஐயா தருமதுரையே போனதடவை உண்டியல் நிரம்பவில்லை இந்த முறை நிரப்பிக் கொடுங்கள் ஐயா


duruvasar
டிச 12, 2025 09:43

. பெட்டியை பற்றிய பேச்சாகத்தான் இருந்திருக்கும் எனேவ இவர் பேசுவது கலப்பிடமில்லாத உண்மையாக தான் பார்க்கவேண்டும்.


முக்கிய வீடியோ