வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வசதிப்படைத்தவர்களுக்கெல்லாம் ஏழைகளுக்கு இணையாக அரசு திட்டங்களின் பலன் கிடைக்கச் செய்ய போராடுவது என்பது வாக்கு அங்கியை அபிவிருத்தி செய்து கொள்ளவே அன்றி நாட்டு நலனுக்காக அல்ல.
நத்தம் : ''எங்களின் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை தி.மு.க., அரசு வழங்கியது,'' -என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார். நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் 525 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இதில் 10 சதவீத வாக்குறுதிகளை தான் நிறைவேற்றி உள்ளனர். நிறுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடனே தொடரும். மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால் தான் வழங்கப்பட்டது. தற்போது, 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் கூறியிருக்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு சொல்லபட்ட பொய்யான வாக்குறுதி அது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கூறினர். ரத்து செய்தனரா? தமிழகம் முழுவதும் 6,000 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் பெரும்பாலான கடைகளை தி.மு.க., கட்சியினரே நடத்தி வருகின்றனர். இவ்வாறு பேசினார்.
வசதிப்படைத்தவர்களுக்கெல்லாம் ஏழைகளுக்கு இணையாக அரசு திட்டங்களின் பலன் கிடைக்கச் செய்ய போராடுவது என்பது வாக்கு அங்கியை அபிவிருத்தி செய்து கொள்ளவே அன்றி நாட்டு நலனுக்காக அல்ல.