தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தென்காசி: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன். இருப்பினும் அடுத்து எது வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என பன்னீர்செல்வம் தெரிவித்தார். தென்காசியில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வரும் காலத்தில் எத்தகைய கூட்டணி வரும் என்பதை, என் தொண்டர்கள் தீர்மானிப்பர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். தமிழக அரசியல் வரலாற்றில், எல்லா கட்சிகளும், எல்லாரிடமும் கூட்டணி வைத்துள்ளனர்; எதிர்த்தும் நின்றுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருக்கிறார். அது சரியானது. அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற சசிகலாவின் அறிக்கையை வரவேற்கிறேன். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகள் சென்றுள்ளார். அவரது ப யணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நடிகர் விஜய் கட்சி யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதே பதில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.