உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை

 எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை

என் மீது, மத்திய பா.ஜ., அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், நீதிமன்றத்தில் பதிலளித்து வென்று விட்டோம். ஆனால், தொடர்ந்து விசாரியுங்கள் என தமிழக அரசுக்கு, அமலாக்கத் துறையிடம் இருந்து மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேருவை அடித்தால் , திருச்சியில் தி.மு.க.,வை வீழ்த்தி விடலாம் என்ற நோக்கத்தோடு பா.ஜ., இதை செய்து கொண்டிருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. திருச்சி மேற்கு தொகுதி மக்களாகிய உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நிச்சயமாக தவறு செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். நீதிமன்றத்தில் விசாரணை உள்ளதால், விபரமாக பேச முடியவில்லை. எனக்கு ஓட்டுகள் போட்டு அனுப்பிய நீங்கள், நேரு இப்படி செஞ்சுட்டாரே என நினைத்துவிடக் கூடாது என்பதற்காக தான் இதை சொல்கிறேன். - நேரு தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை