கொச்சையாக பேசியதால் பா.ஜ.,வில் இணைந்தேன்: நடிகை கஸ்தூரி
சமீப காலத்தில் நடந்த சம்பவங்கள், எனக்கு கோபத்தை அதிகப்படுத்தின. அதற்கு, குரல் கொடுக்கும் போது, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து கொச்சையாக பேசினர். அநீதிக்கும், அநியாயத்துக்கும், நாம் குரல் கொடுக்கும் போது, நடுநிலையாக இருந்தாலும், தி.மு.க., எதிர்ப்பு பா.ஜ., தான் என்பதை, என் தலையில் அவர்கள் ஏற்றி விட்டனர். அதை தொடர்ந்து பா.ஜ.,வில் இணைந்து விட்டேன். ஒரு முறை சிறை சென்று விட்டேன். இதற்கு மேல் பயப்பட எதுவும் இல்லை. ஜாதிய ரீதியாக ஒரு ஆணவக் கொலையை, தமிழகம் சந்தித்தது. சமத்துவம், சமூக நீதி என்று பேசுவோர் யாரும் வாய் திறக்கவில்லை. நடிகராக விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர், அந்த விவகாரத்தில் வாய் கூட திறக்கவில்லை. மோடி தலைமையில், அவர் எங்கே போக சொன்னாலும் போவேன். நயினார் நாகேந்திரன் முயற்சிக்கு வலதுகரமாக செயல்படுவேன். மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை வெறுப்பவள் நான். - கஸ்துாரி, உறுப்பினர், தமிழக பா.ஜ.,