உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!

"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, போக, போக தெரியும் என பாட்டு பாடி பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.சென்னையில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். நிருபர்: அன்புமணி கட்சி பொதுக்கூட்டம் தனியாக நடத்துகிறார். தீர்மானம் நிறைவேற்றுகிறார், இதனை எல்லாம் எப்படி பார்க்கிறீங்க?ராமதாஸ் பதில்: அவரவர் அவர்களின் வேலையை பார்த்து கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய வேலையாக என்னை விடாமல் துரத்துகிறீர்கள்.

பாட்டு பாடி பதில்!

நிருபர்: அன்புமணி தந்தையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சொல்கிறார். நீங்கள் என்ன கட்டளையிட்டாலும் பணியாற்ற தயார் என சொல்கிறார். நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இது போதும் என நினைக்கிறீர்களா?பதில்: கண்ணு நீ சொல்வதற்கான முடிவு, ''போக, போக தெரியும் என பாட்டு பாடி சிரித்து கொண்டே ராமதாஸ் பதில் அளித்தார்.

அப்பட்டமான பொய்!

பா.ம.க., நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''அப்பட்டமான பொய், கடைந்து எடுத்த பொய்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

புரொடஸ்டர்
ஜூன் 20, 2025 09:20

"உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்" என பாடியிருக்கலாம்.


Oviya Vijay
ஜூன் 19, 2025 15:32

பாமக கட்சி உடைந்து விடுமோ என்று நினைத்தேன்... இப்போது தான் தெரிகிறது அல்ரெடி அது உடைந்து சுக்கு நூறாகி இருக்கிறது என்று... இனி அது ஒருபோதும் சேராது... ஆனால் வயது முதிர்வு காரணமாக ராமதாஸ் பின்னால் செல்பவர்கள் குறைவாகவும் லவ்பெல் பின்னால் செல்பவர்கள் அதிமாகவும் இருக்கக்கூடும்... ஆனால் பொதுமக்களின் பார்வையில் பாமக மிகவும் பலவீனமாக தோன்றக்கூடும்... தானாக வந்த கூட்டமோ இல்லை பணம் கொடுத்து கூட்டி வந்த கூட்டமோ எதுவாகினும் அவ்வளவு அழகாக ஒரு மாநாட்டை மிக சமீபத்தில் நடத்திவிட்டு அதற்கான பலனை முழுமையாக அறுவடை செய்ய இரு மாம்பழங்களுக்கும் தெரியவில்லை... எல்லாம் ஈகோ படுத்தும் பாடு...


முக்கிய வீடியோ