உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரசிகர்களை பார்த்ததும் வாயில் வார்த்தைகள் வரவில்லை; பிறந்த நாளில் இளையராஜா நெகிழ்ச்சி!

ரசிகர்களை பார்த்ததும் வாயில் வார்த்தைகள் வரவில்லை; பிறந்த நாளில் இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை: ''ரசிகர்களை பார்த்ததும் வாயடைத்து போகிறேன்; வாயில் வார்த்தைகள் வரவில்லை'' என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இளையராஜா கூறியதாவது: எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. வாழ்க் வளமுடன் நன்றி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mlhblxkr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். ரசிகர்களை பார்த்ததும் வாயடைத்து போகிறேன்; வாயில் வார்த்தைகள் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!தங்களின் சிம்பொனி இசை தமிழகத்தில் ஒலிக்க உள்ள ஆகஸ்ட் 2ம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும், இன்றும், என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 02, 2025 12:29

இதுவரை ரசிகர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு இசை நிகழ்ச்சியாவது பொதுவெளியில் பணம் பெறாமல் நடத்தினீர்களா?


மூர்க்கன்
ஜூன் 02, 2025 14:37

ஏன் இலவசமாக செய்யணும்? உழைத்தால் ஊதியம் கிட்ட வேண்டும்?? இசை இலவசமாக எங்கும் கிடைக்கும் போது கச்சேரிக்குதான் போவேன் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும்.