உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமர்சனங்களை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

விமர்சனங்களை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

புதுடில்லி:''விமர்சனங்கள் தான் ஜனநாயகத்தின் ஆன்மா. என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன்,'' என்று, எழுத்தாளர் லெக்ஸ் பிரிட்மேனுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், பிரபலங்களை பேட்டி எடுத்து பாட்காஸ்ட் செய்வது வழக்கம்.அந்த வகையில், பிரதமர் மோடியை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த பேட்டியை தன் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.பல்வேறு விஷயங்கள் பற்றி இதில் மோடி பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0kn6z55i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என் பலம் என்பது என் பெயரில் இல்லை. 140 கோடி இந்தியர்களின் ஆதரவும், பல்லாயிரம் ஆண்டு கால இந்திய கலாசாரமும் தான் என்னுடைய பலம்.நான் எங்கு சென்றாலும், நான் பல்லாயிரம் ஆண்டு கால வேத பாரம்பரியத்தையும், ஸ்வாமி விவேகானந்தரின் அறிவுரைகளையும், 140 கோடி இந்தியர்களின் ஆசி, கனவுகள், எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டே செல்கிறேன்.இந்தியாவின் பலம்உலகத்தலைவர்களுடன் நான் கை குலுக்கும்போது, அவர்களுடன் உண்மையில் கை குலுக்குவது மோடி அல்ல; அது 140 கோடி இந்தியர்கள் என்பதை கூற விரும்புகிறேன். இது என்னுடைய பலம் அல்ல; இது, இந்தியாவின் பலம்.எப்போதெல்லாம் நாம் அமைதியைப் பற்றி பேசுகிறோமோ, அப்போது உலகம் கவனித்துக் கேட்கிறது. ஏனெனில் இந்தியா என்பது கவுதம புத்தரின் பூமி; மகாத்மா காந்தியின் மண். இந்தியர்கள் ஒருபோதும் சண்டை சச்சரவுகளை விரும்புவதில்லை. நாங்கள் எப்போதும் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம்; ஆதரிக்கிறோம்.நாங்கள் இயற்கைக்கு எதிரான போரையும் விரும்புவதில்லை; நாடுகளுக்குள் சண்டையை வளர்க்கவும் விரும்புவதில்லை; அமைதியை தான் விரும்புகிறோம். எங்கெல்லாம் சமாதானம் பேச முடியுமோ, அங்கெல்லாம் நாங்கள் அந்த பொறுப்பை பெருமிதத்துடன் செய்கிறோம்.இளம் வயதில் வறுமைஎனது சிறு வயது மிகவும் வறுமையில் கழிந்தது. ஆனால், வறுமையின் கொடுமையை உணர்ந்தது இல்லை. நல்ல ஷூ அணிந்து பழகிய ஒருவர், அவை இல்லாத பட்சத்தில் அதன் அருமையை உணர்வார். ஆனால் எங்களை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஷூ அணிந்ததே இல்லை. எனவே, ஷூ அணியாமல் இருப்பது எங்களுக்கு ஒரு சிரமமே இல்லை. நாங்கள் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய ஒரு நிலைமையில் இருந்ததே இல்லை. அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்தோம்.நான் இந்தியாவின் பிரதமர் ஆனபோது, பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்தேன். ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கலாம் என்று அழைத்தேன். அமைதியை ஏற்படுத்துவதற்கான எனது ஒவ்வொரு நல்ல முயற்சியும், விரோதம் மற்றும் துரோகத்துடன் தான் எதிர்கொள்ளப்பட்டது. அவர்கள் அமைதி வழிக்கு வருவார்கள் என்று நாங்கள் உண்மையாகவே நம்பினோம். பாகிஸ்தான் மக்கள் கூட, அமைதிக்காக ஏங்குவதாக நான் நம்புகிறேன்.என்னை குறை சொல்வதையும், அதை நான் எதிர்கொள்வது பற்றியும், ஒரு வாக்கியத்தில் குறிப்பிட வேண்டும் என்றால், நான் விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று கூறுவேன். எனக்கு ஒரு பலமான நம்பிக்கை உள்ளது. விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா. விடியல் வரும்நான் இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இரவு என்பது எவ்வளவு இருட்டாக இருந்தாலும் சரி, இது இன்னும் இரவு தான் என்று கருதுங்கள்; விடியல் வந்தே தீரும்இவ்வாறு மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ray
மார் 16, 2025 22:55

THE MOMENT OF DAWN. DURING THE WORLD ECONOMIC FORUM AT DEVAS, THE WINNER OF THE NOBEL PRIZE FOR PEACE, SHIMON PERES, TOLD THE FOLLOWING STORY. A RABBI GATHERED TOGETHER HIS STUDENTS AND ASKED THEM: “HOW DO WE KNOW THE EXACT MOMENT WHEN NIGHT ENDS AND THE DAY BEGIN?” “WHEN IT'S LIGHT ENOUGH TO TELL A SHEEP FROM A DOG,” SAID A BOY. ANOTHER STUDENT SAID, “NO WHEN IT IS LIGHT ENOUGH TO TELL AN OLIVE TREE FROM A FIG TREE.” “WELL WHAT IS THE RIGHT ANSWER?” ASKED THE BOYS AND THE RABBI SAID, “WHEN A STRANGER APPROACH, AND WE THINK HE IS OUR BROTHER, AND ALL CONFLICTS DISAPPEAR THAT IS THE MOMENT WHEN NIGHT ENDS AND DAY BEGINS.” AN ARTICLE FROM PAULO COELHO'S BOOK “LIKE THE FLOWING OF RIVER”.


Ganesh
மார் 16, 2025 22:05

ஒரு நல்ல தலைவனுடைய வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரவேண்டும்..... மூளையில் இருந்து அல்ல... உதாரணம் காமராஜர், வல்லபாய் பட்டேல், வாஜ்பாய், அப்துல் கலாம்... இந்த வரிசையில் இப்பொழுது மோடி...


K.n. Dhasarathan
மார் 16, 2025 21:52

பிரதமர் அவர்களே "விமர்சனங்களை வரவேற்கிறேன்" நாடகம் எப்போது தொடங்கியது? ஒரு பெண் எம் பி மொய்த்ரா அவர்கள் பேசும்போது பாராளுமன்றத்தில் இருந்து நீங்கள் ஓட்டம் பிடித்தது ஏன் ? பொய்கள் பேசுவதற்கும் ஒரு அளவு வேனம்மா ? அடுத்த பொய், ஒரிஸ்ஸாவில் பூரி ஜகந்நாதர் கோயில் கருவூலம் சாவி தமிழர்கள் எடுத்து சென்று விட்டார்கள், என்று சொன்னது நீங்கள் தானே ? அப்புறம் எங்கிருந்து கைப்பற்றினீர்கள் ? தமிழர்கள் எவ்வளவு கோபம் அடைந்தார்கள் தெரியுமா ? அதைப்பற்றி வருத்தம் தெரிவித்தீர்களா ? தமிழர்கள் எப்படி மன்னிப்பார்கள் ?


raja
மார் 16, 2025 21:02

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஒட்டு இயந்திரத்தில் மென்பொருள் அனைத்து கட்சி வல்லுனர்கள் முன்னிலையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓட்டு இயந்திரத்தில் சின்னத்திற்கான பொத்தான் எவ்வாறு தேர்வு செய்யபடுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சின்னத்தின் வரிசை எண் மாறவேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் சின்னத்தின் வரிசை எண் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இதை உச்சு நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
மார் 16, 2025 21:23

ஓட்டு இயந்திரம் வெறும் கால்குலேட்டர்தான். சாப்பாடு..வேறல்லாம் அதுல கிடையாது. இன்னும் பலபேர் பாமரன் லெவல்ல இருக்காங்க.


சந்திரன்,போத்தனூர்
மார் 16, 2025 21:58

முரசொலியை மட்டும் படிப்பதால் அறிவாலய ஜோம்பிகளுக்கு இம்புட்டுதான் அறிவு வளர்ச்சி இருக்கும் இவர்களை பார்த்து பரிதாபப் படுவதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்


अप्पावी
மார் 16, 2025 20:01

நம்ப ஊர் பத்திரிகைக் காரங்களைக் கண்டாத்தான் அலர்ஜி. பாஞ்சி லட்சம், ரெண்டு கோடி வேலை, ஆளாளுக்கு வூடு, அதானின்னு கேள்வி கேட்டுருவாங்களே..


சந்திரசேகரன்,துறையூர்
மார் 16, 2025 20:49

உன் பெயரை தமிழில் போடு. மவனே உம்மை போன்ற கொல்ட்டி பயலுகதான் தமிழகத்தின் ஒரே தலைவலி


M kathirvelpandian
மார் 16, 2025 19:36

ஐயா விடியல் வேண்டாம் சாமீ. ஏற்கனவே எங்க ஊர்ல ஒருத்தர் கொடுத்த விடியல் போதுமடா சாமின்னு ஆயிருச்சு.


TRE
மார் 16, 2025 19:32

நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுக்கலாமே ஜீ... அவங்க கேக்குற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லலாமே ஜீ... இந்திய பத்திரிக்கை நிரூபர்களுக்கு உங்ககிட்ட கேக்குறதுக்கு பல கேள்விகள் இருக்கு...


SUBBU,MADURAI
மார் 16, 2025 19:11

இது திமுக திராவிடமாடல் அரசுக்கு விடப்பட்ட எச்சரிக்கை! விரைவில் தமிழகத்தில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் அதாவது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி திமுகவிற்கு கெட்ட செய்தி.


kamaraj p
மார் 16, 2025 19:00

மோடிஜி கருத்தை ஆதரிக்கிறேன்


Kalyanaraman
மார் 16, 2025 18:50

நம் பாரத திருநாட்டை நேற்றைக்கு ஏளனமாக பார்த்த நாடுகள் எல்லாம் இன்று வியந்து பார்க்கின்றது. அண்டை நாடுகள்- சீனா உட்பட பயந்து தான் இருக்கிறது. பாகிஸ்தான் பிளவு படும் காலம் தூரம் இல்லை. பிரதமர் மோடி இந்தியாவின் காவல் தெய்வம் என்று சொன்னால் மிகையில்லை.


சமீபத்திய செய்தி