உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் ஏற்க மாட்டேன்: கவாய் உறுதி

ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் ஏற்க மாட்டேன்: கவாய் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஓய்வுக்கு பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் (நவ.,23) ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு மீடியாக்களைச் சந்தித்த கவாய் கூறியதாவது: ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பிரச்னையில் கிரீமிலேயர் பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை செய்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது பார்லிமென்டும், அரசும் தான்.சமத்துவம் என்பது மக்கள் இடையே ஊடுருவ வேண்டும். பல பட்டியல் சாதி குடும்பங்கள் வளர்ந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கவாய் பதிலளித்தார்.

நீதித்துறையில் நெப்போடிசமா

கொலிஜீயம் மூலம் சாதகமான நியமனங்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளின் உறவினர்களுக்கு சலுகை காட்டப்படுகிறதா என்ற கேள்விக்கு கவாய் கூறுகையில், கொலீஜியத்தில் பரிசீலனைக்கு வரும்போது, ஒரு நீதிபதியின் உறவினர் பெயர் மொத்த நியமனங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் கூட எட்டாது. ஒருவர்,, நீதிபதியுடன் தொடர்புடையவர் என்பதற்காக அவரது தகுதியை புறக்கணிக்க முடியாது என்றார்.அரசுக்கு எதிராக முடிவு செய்யாவிட்டால், அவர் சுதந்திரமாக செயல்படும் நீதிபதி அல்ல எனக்கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவாய், உயர்நீதிமன்றங்களுக்கு இடையே நீதிபதி இடமாற்றம் செய்யப்படுவது என்பது நிர்வாக பிரச்னைகளை மனதில் வைத்து எடுக்கப்படுகிறது

ஓய்வுக்கு பிறகு

எனது ரத்தத்தில் சமூகப்பணி கலந்துள்ளது. பழங்குடியினருக்காக எனது நேரத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் நான் ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவாக உள்ளேன்.

மன்னித்தது ஏன்

மன்னிப்பு என்பது இயற்கையாக எனது குணத்தில் இருக்கிறது. இதனால், காலணி வீசிய நபரை மன்னிக்க வேண்டும் என உடனடியாக முடிவு எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஆண்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, '' தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவிலும் கிரீமிலேயர் பிரிவினரை கண்டறிவதற்கான கொள்கைகளை மாநில அரசு வகுக்க வேண்டும்,'' என உத்தரவு பிறப்பித்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை