உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்: இபிஎஸ்

என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: எங்கள் மடியிலே கனம் இல்லை. வழியிலே பயம் இல்லை. கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி எப்படினு உங்களுக்குத் தெரியும். என்ன பூச்சாண்டி காட்டினாலும் பழனிசாமி பயப்படமாட்டான். சட்டத்தின் ஆட்சி நடத்தினோம். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டப்படி தவறு செய்பவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த ஆட்சியில் அப்படியா இருக்கிறது? வேண்டுமென்று திட்டமிட்டு துரோகிகளும் இன்று பேசி வருகின்றனர். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் இயக்கத்திற்கு விசுவாசமானவர்களா?எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம் கூடவே இருந்து நம்மை வீழ்த்த முயன்றார்கள். அத்தனை பேரையும் நாம் வீழ்த்தி, தற்போது அதிமுக தலை நிமிர்ந்து நிற்கிறது. மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்து உள்ளோம். வரும் தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். மக்களின் ஆதரவுடன் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் இதை எல்லாம் தடுத்து நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இல்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.லஞ்சம், ஊழல்மேலும் இபிஎஸ் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டத் திட்டம், முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் நீங்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். வேறு என்ன சாதனை செய்தீர்கள்? இந்த நான்கரை ஆண்டு காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது. லஞ்ச ஊழல் நிறைந்துவிட்டது. எல்லா துறையிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே இல்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று சொல்லுகின்ற அளவுக்கு மிக மோசமான கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.கார்ப்பரேட் கம்பெனிதிமுக என்றால் குடும்பம், குடும்பம் என்றால் திமுக. அது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி. இன்று குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழக மக்களைப் பொறுத்தவரை விழிப்புணர்வுள்ள, அறிவுக்கூர்மையுள்ள மக்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி படைத்த மக்கள். எனவே கொள்ளையடிக்கும் கட்சி தேவையா? ஆட்சியில் இருக்க வேண்டுமா?பிள்ளையார் சுழிஇன்பநிதியையும் கொண்டுவர பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? அவர் குடும்பம் தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? முதல்வராக வேண்டுமா? நெல் மணிகள் முளைத்துவிட்டது. நான் நேரடியாக சென்று பார்த்தேன். விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தல் 2026ம் ஆண்டு தேர்தல். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

velan
நவ 09, 2025 08:20

கண் கூடாக பார்த்தோம் ... எப்படி காலில் விழுந்தார் என்று ... எனவே தமிழக மக்களின் ஆதரவு இவருக்கு கிடைக்காது . இன்னும் சொல்ல போனால் அமைதிப்படை படம் பார்த்தது போன்று உள்ளது


velan
நவ 09, 2025 08:18

ஒன்றுபட்ட அதிமுக + த வெ க + மற்றவை மைனஸ் பாஜெ க = வெற்றி இல்லைன்னா அதிமுக பெயரளவில் எதிர் கட்சியாக இருக்கும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் காணாமல் போகும். அடிப்படையில் அதிமுக ஆதரவு வாக்குகள் சேதம் அடைகிறது. புரியாமல் நானே முதல்வர் நானே தலைவர் என்று கற்பனை உலகில் வளம் வருகிறார் . யாரும் இல்லாத கூடாரத்தில் புலம்பலாம்


பிரேம்ஜி
நவ 09, 2025 07:41

அடுத்த வருடம் இவர் எம்.எல்.ஏ வாக மட்டுமே இருப்பார்! அதுவும் வர வர சந்தேகமாக இருக்கிறது!


vivek
நவ 09, 2025 06:34

பாவம் அங்கே ஒருவர் திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என்று புலம்புகிறார் பொய்ஹிந்து


ஜெய்ஹிந்த்புரம்
நவ 09, 2025 02:38

பாஜக கூட்டணி இருக்கா இல்லையா? தவெக கூட்டணி இருக்கா இல்லையா?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 08, 2025 23:51

தவழ ஆரம்பித்து விடுவார்.


V pravin
நவ 08, 2025 23:05

பச்சைத் தமிழர் எடப்பாடி பழனிச்சாமியார் 2026 மக்கள் ஆதரவுடன் மகத்தான வெற்றி வெற்றி


viki raman
நவ 08, 2025 22:54

எடப்பாடியார் வெல்க வெல்க வெல்க


முக்கிய வீடியோ