உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி தனிக்கட்சி துவங்கினால் நானே பெயர் வைக்கிறேன்: ராமதாஸ்

அன்புமணி தனிக்கட்சி துவங்கினால் நானே பெயர் வைக்கிறேன்: ராமதாஸ்

சென்னை: அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=15llvqit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியலில் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவியும், பா.ம.க., தலைவர் பதவியும் கொடுத்து, தவறு செய்து விட்டேன். பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டு விட்டது என மக்களும், பிற கட்சிகளும் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. அன்புமணி கும்பலில் இருக்கும் சிலரை தவிர, மற்ற அனைவரும் நான் வளர்த்த பிள்ளைகள். சில காரணங்களுக்காக அங்கே சென்று, என்னையும், கட்சியின் கவுரவ தலைவர் மணியையும் திட்டுகின்றனர். பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களில் மூவர், அன்புமணி பக்கம் தெரியாமல் சென்று விட்டனர். மக்களுக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்; அதில் வன்முறை இருந்ததில்லை. கடந்த, 20 ஆண்டுகள் என்னுடன் இருந்த ஒருவருக்கு, பழைய 'இன்னோவா' காரை கொடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் என்னையும், என்னோடு இருப்பவர்கள் பற்றியும், அவதுாறு பரப்பும் புதிய உத்தியை கையாள்கின்றனர்; வன்முறையையும் கையாள்கின்றனர். அன்புமணியிடம் இருப்பது கட்சி அல்ல; ஒரு கும்பல். பா.ம.க., பெயர், கொடி, என் பெயரை, அவர் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் தனி கட்சி துவங்கலாம். பொருத்தமான பெயரை நானே வைக்கிறேன். அன்புமணி கும்பல் தாக்க வந்தாலோ, திட்டினாலோ, பா.ம.க.,வினர் எதிர் வினையாற்றக் கூடாது. வரும் டிச., 30ம் தேதி ஆத்துார், தலைவாசலில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு, யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anand
நவ 07, 2025 14:38

நீ இன்னும் பேசிட்டு தான் இருக்கியா?


vee srikanth
நவ 07, 2025 13:15

காமெடி சேனல் தொடங்குங்கள்


Ayyasamy
நவ 07, 2025 12:32

do something benefits for people instead of wasting time on your feud discussions.


Anbarasu K
நவ 07, 2025 12:10

திராவிட மாடல் படிக்கறதுக்கு பதிலா சும்மாவே இருக்கலாம்


R.MURALIKRISHNAN
நவ 07, 2025 11:02

உன் கட்சிக்கும் நீதான் பேரு வைத்தாய். ஆனா அன்புமணி டெவலப் பண்ணினார். எவரும் பேரு வைக்கிறவருக்கு எதுக்கு தலைமை பதவி? ஓ.... பணப்பொட்டி வாங்கவா? அப்ப நீ நடத்துவது வியாபாரம், கட்சியல்ல


தலைவன்
நவ 07, 2025 15:01

உன் கட்சிக்கும் நீதான் பேரு வைத்தாய் ஆனா அன்புமணி டெவலப் பண்ணினார்??????????? தம்பி முரளி அன்புமணி கட்சிக்கு வந்த பின் என்ன டெவெலப் ஆச்சுனு?? சொறீங்களா?? ராமதாஸ் தவறான கூட்டணி முடிவு எடுத்ததே இல்லை. எப்போதும் வெற்றி கூட்டணியிலேயேதான் இருந்தார். அன்புமணி வந்த பின் வெற்றி??? அது வெறும் கானல் நீர் ஆகி விட்டது. மருத்துவர் ராமதாஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க முனைகிறார்.


duruvasar
நவ 07, 2025 09:42

தந்தை மகன் உறவு பற்றி புரிந்துகொள்ள திராவிட மாடலை படியுங்கள்


Anbarasu K
நவ 07, 2025 09:39

கார்பொரேட் கம்பெனி க்கு பேர் வைக்க போறாரு சம்பாரிச்சது போதாதா ?


sundarsvpr
நவ 07, 2025 09:10

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் தொகுதிகளில் வன்னியர் அல்லாதவர்களுக்கு ஒரு தடவை வாக்கு அளித்துப் பாருங்கள். அன்புமணி ராமதாஸ் அரசியல் விட்டு வெகு தூரம் விலகி நிற்பார்கள். வன்னியர் வாக்கு வன்னியர்களுக்கு என்ற சிந்தனையில் இருந்து விலகினால் தி மு க கட்சியில் வன்னியர் ஒருவருக்கு தலைமைஅமைச்சர் கிடைத்திட வாய்ப்பு கிடைக்கும்


duruvasar
நவ 07, 2025 09:39

மசால் வடை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.


Anbarasu K
நவ 07, 2025 08:00

பொதுவா வயசு ஆச்சுன்னா ஒரு வித கிறுக்கு பிடிச்சிடும் அது இவருக்கு பிடிச்சிருக்கு இந்த வயசுல மக்களுக்காக இப்போ ஏதுவும் இவரால் பண்ண முடியாதுங்க ஒரு காலத்துல மாறி மாறி கூட்டணி வச்சி ஒரு சமுதாய மக்களின் ஆதரவை பயன்படுத்தி கிட்டு இருந்தாரு இப்போ இவரால் ஒண்ணுமே பண்ண முடியல அதான் கர்மா


புதிய வீடியோ