உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.எஸ்.இ., தரத்துக்கு தமிழக அரசு பள்ளிகள் மாறினால் தவறா?

சி.பி.எஸ்.இ., தரத்துக்கு தமிழக அரசு பள்ளிகள் மாறினால் தவறா?

தேசிய கல்விக்கொள்கையை ஏற்பதன் வாயிலாக, ஏழை, எளிய மாணவ - மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தரத்திற்கு மாறும். தமிழக கல்வி முறையை தரம் வாய்ந்ததாக மாற்ற, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது நல்லது' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அனைவருக்கும் கல்வியை தர வேண்டும் என்ற நோக்கில், நாட்டில் முதல் தேசிய கல்விக் கொள்கை, 1968, இரண்டாம் தேசிய கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. 3வது தேசிய கல்விக் கொள்கை, 2020 ஜூலையில் அமல்படுத்தப்பட்டது.

மறுத்து வருகிறது

இது கல்வித்தரத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்தது. இதை, பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்திய நிலையில், ஹிந்தி திணிப்பு என, தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனால், மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:தேசிய கல்விக் கொள்கையை, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, பிரதான எதிர்க்கட்சிகளான காங்., - கம்யூ., ஆளும் மாநிலங்கள் கூட அமல்படுத்தியுள்ளன. கர்நாடகா, கேரள அரசுகள் ஏற்ற நிலையில், தமிழக அரசு மட்டும் அரசியலாக்கி வருகிறது. தற்போது, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும், 5ம் வகுப்பு வரை, 3வது மொழிப் பாடமாகவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை கட்டாய பாடமாகவும் ஹிந்தி உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் தான் ஹிந்தி கற்க வாய்ப்பில்லை.மூன்றாவது மொழிப்பாடம் எனும்போது, அதன் பாடச்சுமை மிகக் குறைவு. குறிப்பாக, மொழியில் உள்ள எழுத்துகளை அறிமுகம் செய்தல், வாசித்தல், எழுதுதல் உள்ளிட்டவை மட்டும் நோக்கம். இது குழந்தைகளுக்கு பாரமில்லை. அப்படி இருந்தால், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேராமல் இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. அதாவது தமிழ் மட்டும் பயிற்றுமொழி. தாய்மொழியில் கற்பதால், குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்கின்றனர் என ஆய்வுகள் கூறினாலும், அரசு பள்ளிகளில் இருந்து தனித்துவமாக காட்டிக்கொள்ள, தனியார் பள்ளிகள் ஆங்கில வழி, ஹிந்தி மொழிப்பாடம், கே.ஜி., வகுப்புகள் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து, மாணவர்களை அதிகளவில் சேர்க்கின்றன. அதனால் தான் அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை, தனியார் பள்ளிகள் விரும்புவதில்லை. அவற்றுக்கு ஆதரவாகவே, அரசின் குரலும் நிலைப்பாடும் இருப்பதாக தெரிகிறது. தாய்மொழிக் கல்வியை தனியார், அரசு பள்ளிகளில் பேதமின்றி அமல்படுத்தினால், தனியார் பள்ளிகளுக்கு வரவேற்பு குறையும். அரசு பள்ளிகளில், கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளையும் உருவாக்க வேண்டியிருக்கும். இதனால் அரசு - தனியார் பள்ளிகள் இடையே வித்தியாசம் இல்லாத நிலை உருவாகும்.

பின்தங்கி உள்ளது

அரசு பள்ளிகளில் இதற்கான கட்டமைப்பு, ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கும். 8ம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பு, மேல்நிலை வகுப்புகளில் விருப்ப பாடத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு என, மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு, இத்திட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.தமிழக பள்ளிக்கல்வி தரத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய மற்ற மாநிலங்களைவிட பின்தங்கியே உள்ளது. நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை சந்திப்பதிலும், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் திணறி வருகின்றனர். அதனால், இதை அரசியல் ஆக்காமல், ஏழை, எளிய மாணவ -- மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகளை தரம் வாய்ந்ததாக மாற்ற, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 87 )

M Ramachandran
பிப் 20, 2025 20:06

அப்படி தரம் உயர்த்தினால் எங்கள் கையரிப்பிற்கு என்ன செய்வது? எங்கள் பொழப்பில் மண்ண அள்ளிபோடுகிறீர்களே. அரசு பள்ளி மாணவர்கள் படித்தால் என்ன படிக்கா விட்டால் எங்களுக்கு என்ன அப்படி படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் நாங்க நடத்தும் பள்ளிகளில் சேரட்டும் ஹிந்தியும் கற்று கொடுப்போம்.


Vinay
பிப் 19, 2025 23:48

ஆமா அமெரிக்கா வந்து ஹிந்தில பேசற , அவன் மூஞ்சி முன்னாடியே கழுவி ஊத்துறான், எதுவும் பேசாம அமைதியா இருக்குற, மொதல்ல மும்மொழி நீங்க படிங்கடா , ஒரு இந்தியன் ரிப்போர்ட்டர் இங்கிலீஷிலே கேள்வி கேக்க தெரியாம கூட வந்துருக்கான் , டிரம்ப் அவன் பேசறதே புரியலைன்னு சொல்லிட்டான் ,


chennai sivakumar
பிப் 19, 2025 22:47

சண்டையே வேண்டாம். மூன்றாவது மொழி அவர்களுடைய மதத்தின் மொழியாக இருக்கட்டும். இஸ்லாமியர்களுக்கு உருது மூன்றாவது மொழியாகவும், இந்துக்களுக்கு சமிஸ்கிரிதம் மூன்றாவது மொழியாகவும், கிறித்துவ மாணவ மாணாக்கர்களுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அந்த மதத்தின் குருமார்கள் தீர்மானித்த பிறகு அந்த மொழியை கற்று கொள்ளலாம். எப்படி ஐடியா???


ulaganathan murugesan
பிப் 19, 2025 20:34

சிபி எஸ் சி ஹிந்தி படித்து விட்டு அப்படி என்ன சாதித்து விட்டார்கள் ? வடக்கனுங்க இந்தி படிச்சிட்டு... ஆகத்தானே இருக்கானுங்க.


SS
பிப் 19, 2025 19:19

CBSE பள்ளியில் படித்தால் தரமான படிப்பு கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. மாநில பாடதிட்டங்களில் படித்து சாதித்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அப்துல்கலாம் மற்றும் மயில்சாமி அண்ணாதுரை போன்ற பலர்.


Kasimani Baskaran
பிப் 19, 2025 21:11

போஸ்டர் ஒட்ட படிக்க வேண்டியதில்லை.


ஆரூர் ரங்
பிப் 19, 2025 22:19

அரசுப்பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை CBSC பள்ளிகளிலேயே சேர்ப்பது ஏன்? சமச்சீர் கல்வி தரம் அப்படி


Kjp
பிப் 23, 2025 12:24

அப்போ முதல்வர் குடும்பம், திமுக அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை எடுத்து விட வேண்டியதுதானே.தரமான படிப்பில்லை எனும் போது அது எதற்கு


globetech engineers airport project
பிப் 19, 2025 17:36

எந்த ஆசிரியர்கள் அப்படி கூறினார்கள் தெளிவாக கூறவும்.


venugopal s
பிப் 19, 2025 17:34

மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியின் தரம் உயர்த்த எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது.ஆனால் மூன்றாவது மொழி படித்தால் தான் மாநிலத்துக்கு நிதி கொடுப்போம் என்று மத்திய பாஜக அரசு சொல்வது ப்ளாக் மெயில் . அதை அனுமதிக்க முடியாது!


Kasimani Baskaran
பிப் 19, 2025 21:14

ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கி ஒப்பந்தப்படி ஒன்றும் செய்யாமல் ஏப்பம் விட்டுவிட்டு சட்டம் பேசுவதுதான் திராவிடமாடலா?


ஆரூர் ரங்
பிப் 19, 2025 22:23

நிதி இப்போதும் அளிக்கப்படுகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மறுப்பதால் அந்த திட்ட அமலுக்குள்ள நிதி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்தை ஒப்புக் கொள்ளாததால் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை அதுபோலத்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கும் திட்டங்களுக்கு நிதி கிடைக்காது.


pandit
பிப் 19, 2025 14:43

இதில் எந்த ஆசிரியர் கோட்டா இல்லாமல், அரசியல்வாதி சிபாரிசு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் வந்தவர்கள். இவர்களுக்கு தமிழே ததிகிணதோம்


venugopal s
பிப் 19, 2025 14:29

சி பி எஸ் ஈ பாடத்திட்டம் எந்த விதத்திலும் மாநில பாடத் திட்டத்தை விட மேலானது கிடையாது. அப்படியே மாற்றினாலும் ஹிந்தி பாடத்திற்கு மாற்றாக தமிழ் படித்தால் நல்லது. மொத்தத்தில் ஹிந்தி மொழி அறிவு தேவையில்லாத ஆணி, அவ்வளவு தான்!


guna
பிப் 19, 2025 15:13

சமச்சீர் வேணு...திமுக நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இருக்கிறது


Kjp
பிப் 19, 2025 16:27

அப்போ வேணு திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை நிறுத்த சொல்லுங்கள்.சும்மாங்காச்சும் கண்டதை உருட்டி வேண்டாம்.


Bala
பிப் 19, 2025 16:58

தமிழே ஒரு காட்டுமிராண்டி பாஷைன்னு ஒங்க வெங்காயதானய்யா சொன்னான்? அவனை தானே திராவிட கூமுட்டைகள் தலைவன் பெரியார் என்றெல்லாம் கொண்டாடினீங்க ?


Mettai* Tamil
பிப் 19, 2025 17:18

உங்க கட்சிக்காரங்க நடத்துற CBSE பள்ளிகளில் காச வாங்கிட்டு ஹிந்தி சொல்லிக்கொடுக்குறாங்க ..அதனால மொதல்ல அங்க போயி அந்த ஹிந்தி மொழி அறிவு தேவையில்லாத ஆணிய புடுங்கப்பாருங்க வேணு ...


Raghavan
பிப் 19, 2025 20:48

தமிழக அரசை உடனே ஒரு G.O போட்டு இங்கு உள்ள தனியார் பள்ளிகளில் இனிமே இருமொழி கொள்கையை தான் பின்பற்றவேண்டும் என்று சொல்லுங்கள். அப்போது தெரியும் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளின் லட்சணம். ஏன் அங்குமட்டும் மும் மொழி கொள்கை. ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தங்கள் நடத்தும் பள்ளியில் மட்டும் ஹிந்தியை போதிக்கலாமா? ஏன் இந்த பாகுபாடு.


Kasimani Baskaran
பிப் 19, 2025 21:16

மொத்த தீம்க்கா கல்வித்தந்தை கூட்டமும் அறிவாளி இல்லை என்று இந்த மட்டை சொல்கிறது.. சொந்தக்காலில் சுட்டுக்கொள்ளும் இதன் அறிவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.


Rengaraj
பிப் 19, 2025 13:43

மத்திய அரசின் பல கல்வித்திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசு மக்களை ஏமாற்றிவருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கை வேண்டாமாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை