உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

விழுப்புரம்: கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அவர் கள் குடித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? கள்ளுக்கடைக்கு அனுமதி அளித்தால், டாஸ்மாக் கடையில் வியாபாரம் குறைந்துவிடுமோ? உயிரை குடிக்கும் விஷக்கடைகளை திறக்கும் அரசு, கள்ளுக்கடைகளை திறக்க ஏன் மறுக்கிறது? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=65zp8deq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேசிய பானமான கள்ளுக்கு, தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவதை ஆய்வு செய்யாத அரசு டாஸ்மாக் விற்பனை குறைவதை ஆய்வு செய்கிறது. கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா?அருகிலிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் அனுமதி உண்டு, தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலை இல்லை இங்கு இவர்களுக்கு சாராய ஆலை இருக்கிறது. இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதல்வருக்கு சாராய ஆலை இருக்கிறதா? தமிழகத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ்மார்க் வாங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்கிறார்கள். சட்டசபையில் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடுகிறோம் என அமைச்சர் பேசுகிறார். இந்த பொங்கலுக்கு 2 நாட்களில் ரூ.725 கோடிக்கு குடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதற்கு இலவசம்? கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Udayasuryan
ஜன 22, 2025 13:57

நல்லவர்கள் நல்லதையே செய்வார்கள் ஆனால்.......


Muruganandam
ஜன 22, 2025 11:46

ஒருவேளை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் நீதிபதிக்கு முன்பு ..இதைப்போல் சீமான் பேசமுடியுமா?


Palani Samy
ஜன 22, 2025 11:34

இந்த விசயத்தில் சீமான் அவர்களின் கருத்து நியாயமான கருத்து.


அப்பாவி
ஜன 22, 2025 08:47

ரெண்டுமே கோமியம்.மாதிரி. நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு.


Shivam
ஜன 21, 2025 21:31

தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்


Ratan Kan
ஜன 21, 2025 20:00

சாராயத்தை விற்பனை செய்யும் அரசு, கள்ளை தடை செய்வது பனை விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம். இரண்டையும் தடை செய்ய வேண்டும், அல்லது இரண்டுக்கும் அனுமதி தர வேண்டும்.


Mohan
ஜன 21, 2025 18:55

சீமான் கட்சிக்கு ஓட்டு போட்டால் கள்ளு மட்டும்தான் குடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அடி வருடிகள், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்தால், கொக்கைன் போதை மருந்து கலந்த IMFL டாஸ்மாக் கலப்பட சாராயம் சாப்பிடலாம். திமுக உறுப்பினர் கூட கூட்டு சேர்ந்து போக்ஸோ குற்றங்களை மாட்டிக்காம செய்யலாம். மாட்டினாலும் குற்றமற்றவன் என சொல்லி வெளியில்விட நன்றியுள்ள நீதியதிகாரிகள் உள்ளனர். கவலைப்பட வேண்டாம்.


venugopal s
ஜன 21, 2025 21:56

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் கோமியம் இலவசமாகக் கொடுப்பார்கள்! குடித்து விட்டுக் கொண்டாடலாம்!


Sidharth
ஜன 21, 2025 18:48

நீ யாருப்பா கள்ளு குடிச்சிட்டு கல்லூரிக்கு போனவன். நீ பேசு


Sivaprakasam Chinnayan
ஜன 21, 2025 18:41

Right Sir. Why the TN Government is not selling the native Toddy. See Pondicherry and Kerala are selling . You might very much aware the politics behind on this.


அப்பாவி
ஜன 21, 2025 18:34

தவறு. எல்லாரும் சாராயம்தான் குடிக்கணும். திருவள்ளுவரே கள்ளுண்ணாமை பற்றிதான் பாடினார். சாராயம் ஓக்கே. கஞ்சா கூட ஓக்கே.


முக்கிய வீடியோ