உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி தமிழகம் வந்தால் தி.மு.க., கூட்டணி வெல்லும் நேரு புது கண்டுபிடிப்பு

மோடி தமிழகம் வந்தால் தி.மு.க., கூட்டணி வெல்லும் நேரு புது கண்டுபிடிப்பு

திருச்சி : தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பகல் கனவு கண்டு, போகும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியில் தெரிந்து, அ.தி.மு.க., கூட்டணியில் தான் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தே.ஜ., கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார். தி.மு.க.,வை விமர்சித்தால் தான், தன் இருப்பை மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ளவே தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் பா.ம.க., அன்புமணி விமர்சிக்கிறார். பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்கு முன் 40 முறை தமிழகம் வந்து சென்றார். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதே போல அடிக்கடி அவர் வந்தால், சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி