உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்'' என திருச்சியில் நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் சீமான் கூறியதாவது: இளையராஜாவை இசை இறைவனாக பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும் போது, இளைய ராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தால் எங்களுக்கு பெருமை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nq8ef1wk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட பல மடங்கு அதிகமான கூட்டம் வரும். இயற்கை வளங்கள் குறித்து நான் போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது புரியும். இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த நிலை நமக்கு வராது என்று யாராவது உறுதி தர முடியுமா?

வேடிக்கை

பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று படுக்க போனால் விழுகிறது உங்கள் சாம்பல் ஆக தான் இருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல் தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது நான் பேசுகிறது வேடிக்கையாக தான் இருக்கும்.

சுவாசிக்க காற்று

நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ராமகிருஷ்ணன்
செப் 15, 2025 14:12

உன்னை சுற்றி வந்த விசிலடிச்சான் குஞ்சுகள் டீவிக்க வுக்கு போயிட்டே இருக்காங்க. உன் புலம்பல் அதிகமாய் ஆயிட்டே இருக்கு, உங்ககூட எவனும் கூட்டணிக்கு வரவே மாட்டார்கள். தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங் மாதிரி உன் மீட்டிங் ஆயிருச்சு.


i am Jose
செப் 15, 2025 13:24

அதுக்குன்னு மலையை வெட்டி வீடு காட்டுனா மழை எப்படிடா பெய்யும்? மழையில்லாத நிலம் பாலைவனம் பாலைவனத்தில் வீடு கட்டி என்ன பிரயோஜனம் அது விரைவில் சமாதி ஆகி விடும். விஞ்ஞானி நீங்க பதில் சொன்னா நல்லா இருக்கும்


VSMani
செப் 15, 2025 11:03

நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படி என்றால் சீமான் தன் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்க மாட்டாரா? வீடு கட்ட செங்கல் சிமெண்ட் மணல் ஜல்லி தேவை. சிமெண்ட் தயாரிக்க சுண்ணாம்புக்கல் limestone தேவை. ஜல்லி பாறையிலிருந்துதான் எடுக்கமுடியும். இவைகள் இல்லாமல் வீடு கட்டும் தொழில் நுட்பத்தை சீமான் விஞ்ஞானி சொன்னால் புதிதாக வீடுகட்டுபவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.


Madras Madra
செப் 15, 2025 11:01

ஆனா தல அஜித்துக்கு வரும் கூட்டம் டீசெண்டான கூட்டம் போதையில வராது


மாபாதகன்
செப் 15, 2025 12:57

பீர் அபிஷேகம் செய்கிற தற்குறிகள் டீசெண்டா?? பொய் சொல்லத்தான் நமக்கு வரல இல்ல ??


Vasudevan S
செப் 15, 2025 08:36

உண்மையான கருத்து மக்களுக்கு மண்டையில் ஏரினால் சரி.


RAAJ68
செப் 15, 2025 07:22

உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல். திமுகவுக்கு நீங்கள் மறைமுக ஆதரவா? நீங்கள் சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆவேசமடைவதை போன்று விஜய் அல்ல.


Rajah
செப் 14, 2025 17:05

உதயநிதி, அப்பாவு போன்று பல கிறிஸ்தவர்கள் திமுகவில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க விஜையை மட்டும் கிறிஸ்தவர் என்று கிண்டல் செய்வது சரியானதா? நீங்கள் ஆதரிக்கும் கட்சிகளுக்கு விஜய் சரிவை ஏற்படுத்துவார் என்ற ஆதங்கத்தில் ஒருவரை அவமதிப்பது அழகல்ல. உங்கள் கட்சி சார்பாக விஜயை எதிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.


vadivelu
செப் 15, 2025 07:11

தாங்கள் வழிபடும் கடவுள், தாங்கள் அன்றாடம் ஏற்று கொண்டு செய்யும் பண்பாடு, கொள்கை , பழக்கங்கள் இவற்றை வேதமாக மதிக்கும் கிருத்துவர்கள், தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதுபாசமும் ஆதரவும் இயற்கையாகவே அளிப்பார்கள். பாராட்டுதல்கள்.


Vasan
செப் 14, 2025 16:46

Seeman Sir, Why are you repeatedly teasing Lady Superstar? Few years back you asked media why Veerappan can not kidnap Nayanthaara. Now you are telling there will 2 times crowd if Nayanthaara is there. What is your intention, to single out a Lady and publicly describe her? Your bad time in woman matter continues.


beindian
செப் 14, 2025 16:45

இவர் ஒரு அரசியல் ப்ரோக்கர், அஜித்தை புகழும் இவர் அவர் அரசியலுக்கு வந்தால் அஜித்தையும் இப்படித்தான் பேசுவார்.


Vasan
செப் 14, 2025 16:39

Nobel prize for spreading EnvironMENTAL awareness goes to Dr.Seeman, for talking about Air, Water, Mountain, Trees.


முக்கிய வீடியோ