உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேகர்பாபு ஐயப்பன் பக்தர் என்றால் இசைவாணியை கைது செய்யணும்

சேகர்பாபு ஐயப்பன் பக்தர் என்றால் இசைவாணியை கைது செய்யணும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.திருத்தணியில் அவர் அளித்த பேட்டி: கானா பாடகி இசைவாணி, ஐயப்பன் குறித்து கேவலமான வரிகளோடு பாடல் பாடி, அதை வெளியிட்டுள்ளார். அப்பாடலில் ஹிந்து மதம் மற்றும் ஐயப்பனை இழிவுபடுத்தியுள்ளார். மத மோதல் ஏற்பட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனேயே இப்பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல், ஹிந்துக்கள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் மனதை பெரிய அளவில் புண்படுத்தி இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் இசைவாணி மீது நடவடிக்கை கோரி, பல்வேறு ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.நடிகை கஸ்துாரிக்கு ஒரு நியாயம்; இசைவாணிக்கு வேறொரு நியாயம் என தமிழக அரசு நடந்து கொள்ளக்கூடாது. சமூக நீதி போராளி ராமதாஸை மோசமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.மஹாராஷ்டிராவில் 'இண்டி' கூட்டணி படுதோல்வி அடைந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து காங்கிரஸ் தலைவர்களான ராகுலும், கார்கேயும் சந்தேகம் கிளப்புகின்றனர்.ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் காங்., கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அங்கே பெற்ற வெற்றிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவரா? உச்ச நீதிமன்றம் கண்டிப்பது போல வெற்றி என்றால் ஓ.கே., தோல்வி என்றால் முறைகேடு என்பது கேவலமான அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

panneer selvam
டிச 04, 2024 15:15

Raja Sir , our beloved Hundi loving minister Sekar babu is not a disciple of any god but to Stalin and his family


baala
டிச 02, 2024 10:53

நடுநிலை


Raa
நவ 28, 2024 16:39

தடிக்காருக்கு பையன்/பெண் கிடையாது, எங்கிருந்து பேத்தி வந்தது என்று நாசாமாய்ப்போற குரூப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது.


sugumar s
நவ 28, 2024 15:13

சேகர் பாபு முதலில் திராவிட மாடல் பக்தர் . அப்பறம் தான் ஐயப்ப பக்தர்.


Dhanraj
நவ 28, 2024 14:24

மதவாதி ராஜா..... பாட வைத்தவர்களோடு மோதுங்கள். கஸ்தூரியை கைது செய்தது தவறு என்றால் அதை உரக்கச் சொல்லுங்கள். நீங்க அறிவாளி மத்தவங்களாம் அறிவாளி அல்ல என்று எவ்வளவு நாள் தான் பேச போறீங்க....?


Mettai* Tamil
நவ 28, 2024 15:12

மத சார்பற்ற ராஜா.....மதத்துக்கு ஒரு சட்டம் , அறநிலையத்துறை என்றில்லாமல் ,இந்தியா வில் உள்ள அனைவருக்கும் பொதுவான சட்டம்,அறநிலையத்துறை வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ...கஸ்தூரியை கைது செய்தது தவறு என்று சொல்லவில்லை .அவரை கைது செய்ததுபோல் .இவரையும் கைது செய்வதில் ஏன் தயக்கம் என்று தான் கேட்கிறார் ..


mei
நவ 28, 2024 14:13

வாணிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?


தஞ்சை மன்னர்
நவ 28, 2024 14:10

"சேகர்பாபு ஐயப்பன் பக்தர்" உங்களை போன்ற தலைமறைவு ஆட்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை


தஞ்சை மன்னர்
நவ 28, 2024 14:07

"" ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் காங்., கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அங்கே பெற்ற வெற்றிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவரா? "" மண்டகசாயம் திரும்பவும் சொல்லுறோம் evm மெஷின் திருட்டு கும்பல் கையில் இருக்கு உங்க கும்பல் எங்க நூல் விடும் எங்கே இழுத்து வைக்க வேண்டும் என்று நல்ல தெரியும் எனவே இங்கே உக்கார்த்து பொய் புளுக வேண்டாம் மேலும் ஒட்டு சிட்டு வந்தால் புளுகுணி ஆட்டம் எல்லாம் அவிழ்ந்து விடும் , ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் நீங்க விளையாடி வந்தால் குட்டு கோர்ட்டில் அசிங்கபட்டு இருக்கவேண்டி இருக்கும்


Mettai* Tamil
நவ 28, 2024 15:26

மண்டகசாயம் நாங்க திரும்பவும் சொல்லுறோம் evm மெஷின் திருட்டு கும்பல் கையில் இருக்குன்னும் உங்க கும்பல் எங்க நூல் விடும் எங்கே இழுத்து வைக்க வேண்டும் என்று நல்ல தெரியுமுன்னு சொல்றீங்களே , MP தேர்தலில் இதே மஹாராஷ்டிராவில் இண்டி கூட்டணி அதிக தொகுதிகள் வெற்றி பெற்றது எப்படி ? EVM தில்லு முல்லா ?..ஓட்டு சீட்டு வந்தால் தான் கள்ள ஓட்டு போடுறீங்களே ....


JANA VEL
நவ 28, 2024 13:52

அவரு இப்போ அல்லேலூயா ...


கட்டத்தேவன்,,திருச்சுழி
நவ 28, 2024 14:47

திராவிடமாடல் ஆட்சியில் நடக்கும் TNPSC எக்ஸாமில்....


Barakat Ali
நவ 28, 2024 13:45

இருப்பது ஒரே இறைவன் .... ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு இறைவன் இருக்க வாய்ப்பில்லை .... ஆகவே நான் எந்த மதத்து இறைவனை அவமானப் படுத்தினாலும் அது அந்த ஒரே இறைவனை அவமானப் படுத்தியது போலாகும் .....


Sivasakthi
நவ 28, 2024 15:27

Well Said .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை