உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னர் ஆட்சி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்கணும்: சொல்கிறார் சீமான்

மன்னர் ஆட்சி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்கணும்: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசை தான் பேச வேண்டும். முதலில் நேரு, நேரு மகளை தான் பேச வேண்டும்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜய் அவரது கட்சி, மாநாடு நடத்துகிறார். மக்களுக்கு மத்தியில் நாம் என்ன கோட்பாடுகளை வைத்து நகர போகிறோம் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். விஜய் நடத்தும் 2வது மாநில மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxxhiu58&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=060வது ஆண்டுகளாக நாட்டில் இரண்டு கட்சிகள் தான் இருக்கிறது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, இபிஎஸ் படம் இடம் பெறுமா? விஜயின் பின்னால் திரளும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். எனக்குத் தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தான் நான் போராடுகிறேன்.

காங்கிரசை தான்...!

ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதில் விஜய் உறுதியாக நிற்க வேண்டும். மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசை தான் பேச வேண்டும். முதலில் நேரு, நேரு மகளை தான் பேச வேண்டும். என் பேசவில்லை. ஒரு குடும்பத்தில் பிறந்த காரணத்தால் பதவி என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும். ஊழல் என தெரிவித்தால் ஊழலுக்காக சிறை சென்ற கட்சி ஒன்று உள்ளது அதை எதிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போது தான் ஒழுங்கு இருக்கும். இது போன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு சீமான் கூறினார்.

வேலை இல்லை...!

தவெக மாநாட்டில் தொண்டர்கள் அதிக அளவில் கூடுவது தொடர்பான கேள்விக்கு நாட்டில் நிறைய பேருக்கு வேலை இல்லை என்பது தெரிகிறது என சீமான் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழன்
ஆக 22, 2025 09:49

சீம ராஜா உங்களுக்கு வர கூட்டம் வேலைய முடிச்சிட்டு வருவாங்களோ இல்லை எல்லாரும் ஆபீரா ராஜா


தமிழன்
ஆக 22, 2025 09:44

ஏன் சீமா ராஜா தி மு க லையும் மன்னர் ஆட்சி தான தாத்தா மகன் பேரன் கொள்ளு பேரன் அடுத்து அவன் வாரிசு.......


Nanchilguru
ஆக 21, 2025 21:53

அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்


தாமரை மலர்கிறது
ஆக 21, 2025 19:32

திமுக காங்கிரஸ் ஐ எதிர்க்கிறேன் என்று சொல்லி, பிஜேபியின் கருத்துக்களை காப்பியடித்து பேசிவருவதால் தான் சீமான் பிஜேபியின் ஓட்டுக்களை சிதறடிக்கிறார். இவர் ஸ்டாலினிடம் பெட்டிவாங்கிக்கொண்டு, நாடக அரசியல் செய்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணி மற்றும் பிஜேபி அணி இடையே தான் போட்டி. இவர் திமுகவை எதிர்ப்பது, பிஜேபி அணியை பலவீனப்படுத்தும்.சீமானுக்கு போடும் ஒட்டு, திமுகவிற்கு போடும் வோட்டு.


Sundar R
ஆக 21, 2025 18:31

International frauds DMK should be kicked out first. Then the first family of the Congress can be given send-off to go to Italy. Our Bharat will be in safe condition only when the above two events happen early.


Murthy
ஆக 21, 2025 17:30

தற்குறிகளின் வெட்டி கழகம் ......


நரேந்திர பாரதி
ஆக 21, 2025 16:45

ஆக மொத்தம் ஒன்னு தெளிவா தெரியுது காசுக்கு விலைபோகாத அரசியல் வியாதி தமிழ்நாட்டில் எவனுமில்லை


நரேந்திர பாரதி
ஆக 21, 2025 16:43

நேத்து போயி அறிவாலய அடைப்பு எடுத்துட்டு வந்தப்புறம், சீமாரின் பேச்சே வேற மாதிரி இருக்கு? ஏன், வாரிசு அரசியல்/மன்னராட்சி தீயமுகவில் இல்லையா? காசு வாங்கிட்டு வந்தப்புறம் கண்ணு குருடாயிடுச்சா?


suresh guptha
ஆக 21, 2025 16:41

முதலில் நேரு, நேரு மகளை தான் பேச வேண்டும். என் பேசவில்லை AT PRESENT MK,STALIN,UDAYANIDHI,INBANIDHI,WHY U R NOT SPEAKING ABOUTTHEM,BECAUSE OF SWEETBOX


S.V.Srinivasan
ஆக 21, 2025 16:01

அப்படி போடு அருவாளை சீமஞ்சி. தீ ம் கவையும் சேர்த்துக்கோங்க.


சமீபத்திய செய்தி